138 (2) உயிர்த்தெழுதல் உளதோ? மத். 22 : 23 - 33; மாற். 12 : 18 - 37; லூக். 20 : 27 - 40. 119. சந்தான மின்றேம ரித்தவன்ச கோதரன்ம ணந்தவன்வி தந்துவையே சந்தான முண்டுபண்ண வேண்டுமவன் சோதரனுக் கென்றுவிதித் தார்மோசே, சந்தான மின்றிமரித் தானொருவன் ஆறுபேர்ச கோதரரி வற்கிருந்தார் சந்தான முண்டுபண்ண வேயிவன்ச கோதரன்ம ணந்தனனே யவ்விதமே. 120. இவ்விதமே செய்திருந்து மில்லைபயன் அவனுமேம ரித்தனன்சந் தானமின்றி அவ்விதம டுத்தவனுஞ் செய்தனனே யவனுமேம ரித்தனன்சந் தானமின்றி இவ்விதமே யேனையோர்ந டந்திருந்து எவனுமேம ரித்தனன்சந் தானமின்றி இவ்விதமா யேழுபேர்ம னைவியானாள் எவன்மனைவி யாகுவாளு யிர்த்தெழும்பில். 121. எத்தனையோ காலசெயங் கொண்டவினா இவரையும யக்குமென நம்பினாரே அத்தனிவர் பெத்தரிக்க மோய்ந்தொழிய இன்னவர்ம னஞ்சிதறி மாறவுமே வித்தகன்மோ சேயைமதித் தாரதனால் அன்னவனே யாக்கினவே தாகமத்தில் உத்தமதிர்ட் டாந்தமெடுத் தன்னவர்க்கே ஓதியேவி டையளித்தா ரட்சணமே. 122. அறிந்திலீரோ வேதவருள் வாக்கையுமே ஆவியாமோர் தெய்வமுட வல்லமையும் பிறிதுமேநீர் தப்பெண்ணங் கொண்டதினாற் பேதகமா யேநினைந்தே பேசுகின்றீர் பிறிதுலகின் பிள்ளைகளோ பெண்கொடுத்தும் பெண்ணெடுத்தும் வாழ்கிறரே யிவ்வுலகில் மரித்தவரு யிர்த்தெழும்பு மாமகிமை யம்மையினிற் கொள்வினைகொ டுப்பனையில். |