123. மறுமைக்குமு யிர்த்தலுக்கும் பாத்திரரோ மறுதரமும் மரணமேய டைவதில்லை மறுமையிலு யிர்த்தெழுதல் மக்களேதாம் மகிமையாந்தூ தர்க்கொப்ப யேயிருப்பார் மறுமையிலு யிர்த்தவரோ கர்த்தருட மகிமையுறு மக்களாக வாழ்ந்திருப்பார் மறுமையிலே மாமகிமை வாழவடைந்தோர் மறுதரம்வி வாகநிலை யேயடையார். 124. வாசிக்கவு மிலையோவ ரைந்துளதை மாண்டவரு யிர்த்தெழுவா ரென்பதையே வாசியுமே முட்செடியின் வாசகத்தில் தெய்வமேமோ சேக்குரைத்த வாக்கையுமே பேசினாரே யாப்ரகாமீ சாக்குயாக்கப் பென்பவரின் தெய்வமாக வுள்ளநித்ய வாசியாகுந் தெய்வமாயி ருக்கிறேனே யென்றுவகை யாய்விரிவாய்ச் சொல்லுகிறார். 125. அவரெவர்க்குத் தெய்வமாயி ருப்பவரென் றமைதியாக வேநிதானித் தேசொலுவீர் அவர்மரண மானவரின் தெய்வமாமோ அல்லதுயி ருள்ளவரின் தெய்வமாமோ அவர்கடவு ளாகாரே மாண்டவர்க்கே அவர்கடவு ளாவார்சீ வனுளார்க்கே அவர்க்கெனப்பி ழைத்திருக்கின் றாரெலோரும் என்றுரைக்க ஆச்சரிய மாயினரே. 126. சதிமிகுமோ சர்களேவிசு வாசுமிலார் சனம்பலரை மதிமயங்கச் செய்தவரே சதுசேயப் பேர்வழியே சேர்ந்தவரே சலித்தவராய் மனமடிந்து நீங்கினரே அதுசரியே பேசெனவங் கோர்மனுடன் அதுவிதமே சொல்லுமேன்றார் பாரகரும் இதுமுடிய இன்னெருவ னங்குவந்தே யினமொடுமே வினவினனே சாத்திரியே. 138. (3) பிரதான கற்பனை எது. மத். 22 : 34 - 40; மாற். 12 : 28 - 34. 127. ஞாயசாத்திரி கேட்டதொரு கேள்வியிதே ஞாயப்ர மாணத்தைப் பற்றியதே ஞாயப்ர மாணத்தின் கற்பனைக்குள் நன்றுமேலாங் கற்பனையே யாதெனவே ஞாயமாயே சொல்வதெனிற் கற்பனைக்குள் நன்றுமேலோ கீழோவென் பேதமில்லை ஞாயப்ர மாணத்தின் பற்பனைக்குள் நன்றுமேலாங் கற்பனையே சொல்லுகிறேன். |