128. என்சனமா மிசரவேலென் கோத்திரமே யிதமொடுமே கேட்பாயே யிவ்வுரையை எங்கடவு ளானவரே கர்த்தரேதாம் இவரொருவ ரேநமது கர்த்தராவார் உன்கடவுள் கர்த்தரிட மன்புகூர்வாய் உனதுமுழு ஆன்மமொடும் உள்ளமொடும் உன்முழுப்ப லத்தொடுமுன் னிதயமொடும் உனக்கிதுவே முக்கியமாங் கற்பனையாம் 129. இதற்கிணையா முக்கியமாங் கற்பனையே யேதெனவே செப்புகின்றே னேயினிதாய் இதரனான வுன்பிறனி லன்புகூர்வாய் இனிதொடுநீ யுன்னிலன்பு கூர்வதுபோல் இதுரண்டின் மேற்சிறந்த கற்பனையில் எழிலுயர்ஞா யப்ரமாணந் தரிசனமும் இதுரண்டி லேயடங்கி யுள்ளதென்றார் இனியெவருங் கேள்விகேட்க வந்ததில்லை. 130. சரியிதுவே போதகரே சொன்னதேநீர் சத்தியமொன் றேகடவு ளேயலாதே மறுகடவு ளாருமில்லை யவரைமுழுச் சிந்தைமுழு வன்மைமுழு ஆன்மமுமு இருதயமோ டன்புமேதான் கூர்வதலால் தன்பிறனைத் தன்னையேபோல நேசிப்பதும் சருவதக னப்பலியோ யாவிலுமே சாலமேன்மை யானதென்றான் பாரகனே. 131. பாரகனே யிவ்விதம்வி வேகமோடே பகர்ந்ததொரு சத்தியத்தைக் கேட்கவுமே தூரமானோ னல்லனேநீ மாகடவுள் தூயராச்சி யத்தினுக்கே யென்றுரைத்தார் தூரமாக வேலிலக வஞ்சகரே நொந்தரவே செய்யவேது ணிந்திலராய் பார்த்தவணே நின்றபரி சேயரையே பார்த்தவரே கேட்டனரோர் கேள்வியீதே. 138. (4) கிறிஸ்து யாருடைய குமாரன். மத். 22 : 41 - 46; மாற். 12 : 35 - 37. 132. எவ்விதம்நி னைக்கிறீர்கி றித்துவையே எவர்குமார னாவரீவர் என்றிசைக்க இவ்விதம்நி னைக்கிறோங்கி றித்துவையே எமதிறைவன் தாவீதின் மைந்தனென்றார் அவ்விதம்நீர் சொல்வதற்கே நியாயமென்ன அறிந்திலீரோசொல்லியதாம் வாக்கவனே இவ்விதமி சைத்தனனே யாவியினால் என்னுடஆண் டாரெனவே கீதத்தினில். |