பக்கம் எண் :

திரு அவதாரம்273

 

133.       உம்முடைய சத்துருக்கள் யாவரையும் உம்முடைய பாதபடி யாக்குமட்டும்
              எம்முடைய வல்லபாகம் வீற்றிருமென் றேயுரைத்தார் கர்த்தரேயென் னாண்டவர்க்கே
              எம்பிதாதா வீதவரை யாண்டவரென் றேயுரைக்க எப்படிக்கு மாரனாவார்
              எம்பிரானிக் கேள்வியையே கேட்கவுமே யாருமேயி தற்கெதுமோர் வாக்குரையார்.

134.       விலகினரே பரிசயாரே சாதுசேயர் சாத்திரியர் வேதபாரர் யாவருமே
              அலகையிட னாலிழுக்கப் பட்டவரே கோபமோ டகங்கரித்தே நீங்கினரே
              விலகாதே நின்றிருந்தார் மற்றவரோ வேதகுருவோ அவர்க்குஞ் சீடருக்கும்
             பலவரையாய்ப் போதனைசெய் தேகடிந்தார் பரிசயரின் பாரகரின் மாயத்தை.

138.மாய்மாலர். மத். 23; மாற். 12 : 38 - 40; லூக். 20 : 45 - 47.

135.       வேதபார கர்களும்பரி சேயருமே வீற்றிருக்கின் றார்மோசே யாசனத்தில்
              ஆதலினாற் போதனையே கேட்குமலாற் கொண்டதனைச் சாதனைசெய் வீரவரின்
              சாதனையே போலாட வாதிருமின் போதனையுஞ் சாதனையு மொவ்வுதலில்
              போதனையோ ஓர்புறமே மாபுனிதம் புல்லியரின் சாதனையோ மோசமேயாம்.

136.       சுமத்துவரே மற்றவரின் தோள்களின்மேல் சுமக்கஅரி தாம்பெரிய சுமைகளையே
              சமர்த்தொடுமே யச்சுமைக ளோஅவர்கள் தொடுவதில்லை தம்விரலாற் சற்றெனுமே
              சுமப்பவரே கட்டமேய டைந்திடினும் உதவியாதுஞ் செய்யார்சு மப்பவர்க்கே
              சுமர்ந்துமேநின் றந்நியர்பு கழ்பெறவே அவரறிய வேண்டுமென்றே க்ரியைசெய்வார்.

137.       விரும்புவரே தம்பெருமை மேன்மையுமே விளங்குவரே நீண்டஅங்கி தாம்தரித்தே
              விரும்புவர்நா டாக்களையே மாவகலம் விரும்புவரே நீளமான தொங்கலுமே
              விரும்புவர்முன் தானத்தை யேவிருந்தில் விரும்புவரே முன்னிடந்க ளாலயத்தில்
              விரும்புவரே சந்தைகளில் வந்தனங்கள் விரும்புவர்ர பீரபீயென் றேயழைக்க.