பக்கம் எண் :

திரு அவதாரம்321

 

25.        அப்பா பிதாவே யும்மா லெதுவுமே யாகா தாமோ
              அப்பா கசப்பீ தென்னோ அருவருக் கிறதென் னான்மம்
              இப்பாத் ரம்மென் னைவிட் டெளிதினில் நீக்குந் தந்தாய்
              அப்பா அன்றிறன் சித்தம் ஆகவுஞ் சித்தந் தானே

26.        இப்படி யொப்பு வித்தும் எழில்பரன் சித்தத் துக்கே
              அப்படித் தூதன் தோன்றி ஆதரித் தானென் றாலும்
              இப்புவிப் பாவப் பாரம் இணையிலா வேதை யோடே
              மெய்பதைக் கச்செய் தந்தோ வியர்வை யுங்குரு திஆச்சே.

27.        பேதுரு வேயாக் கோபே பேரன் பாயோ வானே
              ஆதர வற்றோர் போலே ஆண்டவர் தனித்தே தானாய்
              பூதல மேலே வீழ்ந்தே புலம்புமோர் நோத தில்நீர்
              காதலே யற்றோர் போலே கனதுயி லேன்கொண் டீரோ.

28.        காவலோ சாவுற் றாலும் காதலாய்ப் பின்செல் வேனென்
              றாவலாய்ச் சொன்னாய் நீயே யவ்வுரை மறந்தா யன்றோ
              மேவுசோ தனைக்குள் வீழ்ந்தே யிடறா திருக்கும் வண்ணம்
              காவலாய் விழித்தே நீவிர் காத்துஜெ பிக்கச் சொன்னார்.

29.        எச்சரிப் பைவீ ணாக்கி எளிதினில் மறந்தே போனீர்
              அச்சனே யுமக்குச் சொன்ன அனைத்துமே யவஞ்செய் தீரே
              பச்சமும் பறந்தே போச்சே படுத்துறக் கங்கொண் டீரே
              அச்சமை யந்தான் நீவிர் அயர்ந்துமே தூக்கங் கொண்டீர்.

30.        செபத்தை முடித்தே நாதன் தேற்றர வடைந்தோ ராக
              தபத்தினின் றெழுந்தே நாதன் தாண்டிவந் தனரே யிங்கே
              ஆபத்துக் குதவா தாராய் அன்பெது மில்லார் போலே
              சோபமாய் மறந்தே மெய்யே தூங்கவே கண்டா ரங்கே.

31.        என்னுட சீடர் நீவிர் என்னொடு மிருந்தோர் நீவிர்
              என்னுட வாக்கை நீவிர் எத்திள முங்கேட் டோரே
              என்னொடுஞ் சேர்ந்தே யேனோ ஓர்மணி நேரந் தானே
              இந்நே ரத்தில் நீவிர் விழித்திருக் கக்கூ டாதோ?