39. முன்னதாய் நடந்தே தானே வழிகாட் டினனே மோசம் பின்னால் மற்றோர் வந்தார் பேணிமுன் யூதாஸ் வந்தான் முன்னவ னேகேட் டாரே யன்னவர் முன்னால் வந்தே என்னநீ ரிங்கே வந்தீர் தேடுவ தெவரை யென்றே. 40. நசரய னாகுஞ் ஜேசை நாந்தே டுகிறோம் என்றார் நசரய னாகுஞ் ஜேசோ நானெனச் சொன்னார் நாதன் இசைக்கவே யீதே வார்த்தை யிடியாற் றாக்குண் டார்போல் விசையாய்ப் பின்னாற் சாய்ந்தே விழுந்தனர் பாரின் மீதே. 41. எழுந்தனர் வீழ்ந்தோ ரன்றோர் எழுந்துவி ழித்தே நின்றார் எழுந்துநின் றோரைக் கேட்டார் தேடுவ தெவரை யோநீர் தெளிந்துய திற்சொன் னாரே தேடுகின் றோமே யீவண் நலிந்துமே யாத்ரத் தோடே நசரயன் ஜேனசத் தானே. 42. தேடின தென்னை யானாற் திடமொடு மிவர்கள் தாமே நாடிய இடமே யேக நலமொடும் விடும்என் றாரே நாடிநீ ரீய்ந்தோ ருக்குள் எவனொரு வனையும் நானே வாடியி ழந்தே னில்லை யெனுமுரை நிறைவே றற்கே. 43. ஓடியே வந்தான் யூதாஸ் உத்தமர் நாதன் பக்கம் நாடியே கிட்டிச் சேர்ந்தான் நடித்தேன் நண்பன் போலே வாடுமு கத்தோ னாக "ரபீரபீ வாழ்வீர்" என்றே மோடியா யவர்கள் னத்தில் வஞ்சக முத்தந் தந்தான். 44. நெஞ்சிலே கேடுற் றோனை "நேசனே" யென்றே நாதன் கொஞ்சமுங் கோப மில்லாத் தண்முகங் கொண்டே சொன்னார் என்சிநே கம்பெற் றோனே யேனிவண் வந்தாய் யூதாஸ் வஞ்சக முத்தத் தாலோ மைந்தனைப்க காட்டு கின்றாய். 45. திடனடைந் தோராம் சேர்ந்தவர் மேற்போட் டார்கை உடனுள் சீடர் கேட்டார் வெட்டுவோ மோகை யோங்கி திடமொடு சீமோன் பேதுரு தீர்க்கமாய் வாளை யோங்கி அடவொடே வெட்டிப் போட்டான் அற்றிட மல்கூஸ் காதே. |