46. பேதுரு வாற்கா தற்றோன் பெரியவர்ச் சகனூழ் யன்தான் ஆகா வீயுங் கர்த்தன் அதையிதஞ் செய்தார் தொட்டே போதுமே நிறுத்துன் வாளை உரையினுட் போடென் றாரே பேதுரு வைப்பார்த் தின்னும் பேணியே சொன்னார் நாதன். 47. பட்டய மெடுப்போர் தாமே பட்டயத் தால்மாள் வாரே திட்டமாய்ப் பிதாவே யீய்ந்த தீயபாத் திரத்தில் யானே திட்டமாய்ப் பானஞ் செய்தே தீரவே வேண்டு மன்றோ இட்டமாய்க் கேட்டாற் றந்தை யென்ஜெபங் கேளா ரோசொல். 48. பன்னிரு லேகி யோனிற் பன்மடங் காந்தூ தாட்கள் என்னிட மனுப்பா ரென்றே நீதினைக் கின்றா யோசொல் இன்னவி தஞ்செய் தாலோ இவ்வித மாமென் றோர்கால் முன்சொன வாக்கெல் லாமே முற்றிலும் நிறைவே றாதே. 49. ஒருவனே யென்னைப் பற்ற திரளவே வேண்டா மூரே திருடனைப் போலே பற்ற திரண்டுமே வந்தீர் நீவிர் உருவுபட் டயமே யேனோ ஏன்தடி யுடைவா ளுந்தான் திருடனோ பகற்கா லத்தில் திருவா லயஞ்செல் வேனோ 50. அனுதின முங்கட் குள்ளே ஆலயத் தினிலுட் கார்ந்தே தினந்தின முமக்கே யானே திருவுப தேசஞ் செய்தேன் எனதொடு மிருந்தீ ரேநீர் பிடிக்கவே யப்போ என்னை மனத்துணி வற்றே போச்சே மறந்துமே போனீ ரோனீர். 51. இதேயா யிற்றும் வேளை யிருள்மக் களேகேட் பீரே அதேயது தானே யந்த காரத் ததிகா ரந்தான் எதுந்தீர்க் கர்வாக் கேபோல் இயங்கவே வேண்டு மன்றோ அதுவாய் உள்ளேன் யானே யென்றொப் புவித்தார் தம்மை. 52. பிடித்தனர் பரனாஞ் ஜேசைக் கட்டினர் பின்கட் டாயே அடித்தனர் ஆண்டார் தம்மை செய்தலங் கோலந் தானே துடுக்கோ டிழுத்தே சென்றார் தூயரைத் துட்டர் தாமே எடுத்தன ரோட்டஞ் சீடர் ஏகமாய் விட்டே ஜேசை. |