பக்கம் எண் :

திரு அவதாரம்325

 

53.        ஒருவனே தொடர்ந்தான் பின்னால் போர்த்தொன் றேதுப் பட்டி
              சுருக்கமாய்ப் பிடித்தா ரந்த வாலிப னைத்துட் டர்கள்
              அருமையா யவன்தன் ஜுவன் அக்கரை யாயே காக்க
              ஒருதுணி தானே விட்டே யோடினா னாடை யின்றே.

160. அன்னாவின் விசாரணை. யோ. 18 : 13 - 24.

54.        திருவுரு வானோர் ஜேசை திருடனே போற்கொண் டேக
              இருபேர் தொடர்ந்தா ரங்கே பிலர்பின் னாற்றூ ரத்தில்
              ஒருவனோ சீமோன் கேபா ஒருவனோ ஆச்சார் யற்கே
              அறிமுக னானோ னாமே யருளனா மன்பன் தானே.

55.        இருவரு மொருமித் தங்கே யேசுபோம் பாதை சென்றார்.
              மருவிலா மறியா னோரே மாதுய ருற்றா ரிப்போ
              நெருங்கியே கொடியோ ராவோர் நிந்தைப ரீகா சங்கள்
              பெரிதுமே சொரிந்தா ரன்றா செய்தனர் பேர்துன் பேதான்.

56.        காவை விட்டப் பாலே குன்றுகா னாறுந் தாண்டி
              மேவியே சாலேம் நீண்ட வீதியுங் தாண்டிப் பின்னர்
              பாவியர் தூயர் ஜேசைப் பரபரப் பாயே யீழ்த்தே
              ஆவலாய்க் காத்தே நின்றோன் அர்ச்சகன் வீடே சேர்ந்தார்.

57.        அரமனை பெரியோ ரான அர்ச்சகர் வாசஸ் தானம்
              பெரியவர்ச் சகனவ் வாண்டிற் காய்ப வென்பேர் கொண்டோன்
              ஒருவனே யொருவன் சாதல் உற்றதஞ் ஜனத்துக் காக
              பெரிதுமே நலமா மென்றே பேணியே சொன்னோன் தானே.

58.        அரமனை சேர்ந்தா ரப்போ யாவரு முட்சென் றாரே
              அரமனைக் குட்சென றானே யர்ச்சக னானோ னுக்கே
              அறிமுக மானோ னேதான் அருளனா மன்பன் தானே
              பிரவே சித்தா னில்லை போதுரோ வெளியே நின்றான்.

59.        அறிமுக மானோ னேதான் அருளனோ அங்கே வந்தே
              தெருக்கபா டங்காப் போரை திடமொடுங் கண்டே பேசி
              மறுதர முட்சென் றானே மயங்குபே துருவைச் சேர்த்தே
              இருவருஞ் சேர்ந்தே சென்றார் இனும்நேர் வதையே பார்க்க.