60. அன்னா வின்முன் விட்டார் அண்ணலைக் கொண்டே போனோர் அன்னா காய்பா மாமன் அர்ச்சக னிவனுக் கேமுன் முன்னோன் முன்னால் நிற்க முன்பினுங் கேள்வி கேட்டான் மன்னுபோ தகமே பற்றி மற்றவர் சீடர் பற்றி. 61. அந்தரங் கத்தில் யாதும் பேசினை னோவ றைக்குள் இந்தலோ கத்தோ டேயான் பேசினே னெவரோ டுந்தான் அந்தமா லயத்திற் றானே அடர்திரள் யூதர்க் குள்ளே எந்தவோர் சூனோ கோவில் எவணுமே போதித் தேனே. 62. என்னைவி சாரித் தற்கே யவசிய மிலையே யானே சொன்னவை கேட்டோர் தம்மை சுயவிசாாணையே செய்மின் அன்னவ ரேயான் சொன்ன அனைத்தும றிந்தோர் என்றார் முன்னவ னீதே சொல்ல முனிந்தான் வீரன் ஒருவன். 63. கன்னத் தினிலே யோச்சி காதக னாமவ் வூழியன் என்னவுத் தாரஞ் சொன்னாய் ஏற்றதே யுனக்கே யீதே மன்னுமாச் சார்யன் தாமே மற்றவர்க் குமேயோர் மாமன் என்னது ணிந்தே சொன்னாய் ஏற்றதோ ஈதென் றானே. 64. என்தனை யடிக்க நீயே யுனக்கெதும் உண்டோ ஞாயம் எந்தவி தத்திற் றப்போ ஒப்புவிப் பாயென் சொல்லில் என்தனின் சொற்கள் யாவும் ஏற்றவை யாகும் நன்றாய் உன்தனின் செய்கை யந்தோ ஒப்பவே யாகா தென்றார். 65. கேட்டவை யுண்டே யின்னும் கேட்டுமே பதிலே யில்லை லாட்டமுற் றோராம் நாதன் மௌனமே கொண்டா ரன்றோ சேட்டைப ரீகா சங்கள் சேவகர் மிகச்செய் தாரே தாட்டிக மாயெல் லாமே தாங்கினார் தயங்கா தேதாம். 66. பார்த்தன னியல்பே யீதை பணிவொடும் முன்னிற் போர்மேல் ஆத்திர மாயே சீறி அவர்மேற் கோபங் கொண்டான் சாத்திரம் போலன் னோரை விசாரித் தேதண் டிக்க சாத்திரக் காய்பா முன்னே யனுப்பினன் ஜல்தி யாயே. |