74. மறுதலித் தானே கேபா மனதினிற் பயமே கொண்டே கரிநெருப் போரம் விட்டே கடிதினில் விலகிச் சென்றான் அருகுமண் டபமே நோக்கி யவசர மாய்ச்சேர்ந் தானே தெருவினி லுளதோர் சேவல் சிறகடித் தேகூ விற்றே. 75. மண்டபஞ் சேர்ந்தா னப்போ பிறிதொரு மாதுங் கண்டே அண்டையில் வந்தே நின்றே யவனையே யுற்றுப் பார்த்தாள் அண்டையுள் ளோரைக் கூவி யழைத்துமே சுட்டிக் காட்டி விண்டனள் இன்னோன் பாரும் இயேசுவைச் சேர்ந்தோன் மெய்யே. 76. ஈண்டிவ ளிவ்வண் ணந்தா னிசைக்கவே கேபா தானே மீண்டுமே மறுத்தா னந்தோ பதறியே யுள்ளும் மெய்யும் காண்டிலேன் யாரோ இவ்வாள் கனவிலு மறியே னேயான் ஈண்டிதே சத்யந் தானே யெனவிசைத் தானை யிட்டான். 77. ஈண்டிவை நிகழும் நேரம் இழிகுணச் சங்கத் தார்முன் ஆண்டவ ரங்குள் ளோரால் அவமரி யாதை யுற்றார் ஆணடவ ரங்கிப் பாடே யனுபவிக் கும்மவ் வேளை ஈண்டிதே சீடன் சீமோன் இனுமிகத் தீங்குள் ளானான். 78. ஆண்டுநின் றோர்க்குட் பல்பேர் அவனை யேயுற் றுப்பார்த்தார் ஆங்குநின் றோர்க்குள் ளோர்வன் அவர்களி லோர்வன் என்றானே ஈங்கிவன் காலி லேயன் இல்லை யோர்சந் தேகமும் ஈங்கிவன் பேச்சே தானே காட்டுகின றதேயிவ னேயே. 79. காதறுந் தோன்மல் கூசுக் கண்டினோ னோர்வன் கண்டான் ஆதர வற்றோ னாக ஆங்குத னித்தே நிற்கும் பேதுரைச் சுட்டிக் காட்டிப் பேதமில் லிவனன் னோனே காதல ரோடும் நின்றான் காவினிற் கண்டே னென்றான். 80. மறுதலித் தானே கேபா மறுதரம் மூன்றாம் வேளை அறிந்திலே னுன்தன் பேச்சை யாங்குள மாந்தன் தன்னை சரியிதே யானே சொல்தல் சபித்துமே யாணை யிட்டான் அறியவே கூவிற் றப்போ அவணொரு சேவற் றானே. |