பக்கம் எண் :

திரு அவதாரம்329

 

81.        அறிவும ருண்டோன் சீடன் மறுக்கவே யந்நே ரத்தில்
              அருளுரு வானோர் தாமே யவனையே ரட்சித் தற்காய்
              உருகியே மனமு வந்தே யுருக்கமாம் பார்வை யாயே
              திரும்பியே பார்த்தன் னோனின் உள்ளமே சிதறச் செய்தார்.

82.        பொங்கின திதயந் தானே புழுங்கின தன்னோ னுள்ளம்
              தண்கதிர் விழியே தன்மேற் றயவொடும் படவே தானே
              அங்கிருந் தெழுந்தே சென்றான் அகன்றவ் விடமே விட்டே
              பொங்கிய மனதுள் ளோனாய் மனையை விட்டே போனான்.

83.        இருமுறை சேவற் கூமுன் இரண்டல மூன்றே நேரம்
              மருவிலாத் தம்மைத் தானே மறுதலிப் பாயென் றாரே
              அருளொடெச் சரிப்பே தந்தார் மறுத்தே னறிவில் லாதே
              திருவுளம் நோகச் செய்தேன் திருக்குருத் துரோகஞ் செய்தேன்.

84.        எனைநிக ரன்பன் யாரும் இலனெனப் பெருமிற் தேனே
              எனைநிக ரறிஞன் யாரும் இலனெனக் கர்வங் கொண்டேன்
              எனைநிகர் பெரிதோர் மூடன் இதுவுல கெவணுங் காணீர்
              எனைநிகர் பெரிதோர் துரோகி யிதுவுல கெவணுங் காணீர்.

85.        இனியதெள் ளமுதந் தந்தோர் எனின்குரு மறுத்தேன் துரோகி
              எனின்திருப் பரனின் மைந்தன் தனையே மறுத்தேன் தோசி
              இனியநல் லுயிர்வாக் கென்று முடையவர் மறுத்தேன பாவி
              இனியென் செய்வே னேயான் இனியெனின் கதியும் யாதோ?

86.        ஆர்வமும் மழுங்கிப் போச்சோ சுகமுடைந் தழுதா னன்றோ
              மார்பினி லடித்துக் கொண்டான் மனங்கசந் தழுதா னின்றோ
              நேர்தன திடமே சேர்ந்தான மனமிலா தங்கே நிற்க
              யாரிருந் தும்யார் வந்தும் யாரகன் றும்மென் னென்றான்.

87.        வெட்கி சிரமே தொங்க வெறுத்தனன் தன்னை யேதான்
              துக்கசா கரத்திற் றாழ்ந்தான் நினைத்தே தனதுரோ கத்தை
              அக்கம் பக்கஞ் செல்லா தமர்ந்தொரு இடத்திற் றானே
              அக்கரை யொடுமான் டாரே யாதரந் தருமட் டுந்தான்.