பக்கம் எண் :

330

 

88.        திருவுரு வானோர் நாதா திருச்சுதா வுஞ்சீ டர்க்குள்
              ஒருவனோ வுன்னைக் காட்ட ஓடினா ரொன்மர் விட்டே
              இருவரோ தொடர்ந்தா ரென்றால் இளைஞ்ஞனே நின்றா னன்றோ
              ஒருவனோ தீர்க்கங் கொண்டோன் ஒருவனும் மறுத்தே வீழ்ந்தான்.

89.        மருவிலா ஆடாம் நாதா மாசிலாக் கடவுள் மைந்தா
              குருபரா வுவந்தே நீயே குருவுப தேசஞ் செய்தும்
              மருவுறும் மைந்தர் கோடி மானுடர் யாபே ருள்ளும்
              ஒருவனு மேநிற் பானோ உனதா வியரே யின்றேல்.

162.காய்பா சனதரீம் சங்கம்.
மத். 26 : 57. 59 - 68; மாற். 14 : 53 - 65; லூக். 22 : 54, 63 - 71; யோ. 18:24.

90.        சங்கமா யேயுட் கார்ந்தே யவர்சதி செய்படி முன்பே
              அங்கமர் வீரர் யாரும் அரமனை யூழியர் தாமும்
              சிங்கமாம் நாதன் ஜேசை யுமிழ்ந்துமே சிறுமை செய்தார்
              பங்கமும் பரிகா சஞ்செய் தடித்தனர் பரனை யன்னோர்.

91.        கூடின ரேசங் கத்தார் குருபிர தானாச் சாரியர்
              கூடினர் மூப்பர் தாமும் குழுமினர் பாரர் தாமும்
              நாடினர் சங்கம் பேரால் கொலைசெய நாதன் ஜேசை
              தேடினர் பல்பேர் சாட்சி திரண்டுமே சொலப்பொய்ச் சாட்சி.

92.        சாட்சிய நேகம் பேர்பொய்ச் சாட்சியஞ் சொன்னா ரானால்
              சாட்சியர் சொல்லும் வாக்கோ ஒவ்வவில் சற்றே னுந்தான்
              மாட்சியா யிருந்தோர் வீற்றே நன்மறை யாளர் சேர்ந்தார்
              சாட்சியா யீர்வர் வந்தார் சாட்சியஞ் சொன்னா ரீதே.

93.        நலமொடே யேரோ தேந்தல் வருடமே நாற்பத் தாறாய்
              திலகமாய்ப் பாரீ தற்கே திருப்பரன் தொழுகைக் கென்றே
              இலங்குமா ளிகையா யீதை யெழில்மிக அமைத்தே வைத்த
              இலங்குமா லயமே யீதை யெளிதினி லிடித்துப் போட்டே.

94.        இலங்குமா மகிமை யாயே யிலங்குமா லயம்வே றொன்றே
              இலங்கவே தினங்கள் மூன்றில் எழுப்புவேன் மாலே சாயே
              உலங்கன மாயின் னோனே யுரைக்கவே கேட்டோம் மெய்யே
              களங்கமே யிலையே யீதில் கருத்தொடு சொல்கின் றோமே.