பக்கம் எண் :

திரு அவதாரம்333

 

109.       சங்கமு டிந்தே போக சபையுளோ ரெழுந்தே சென்றார்
              அங்கமர் பேராச் சார்யன் பிறிதம ராச்சார் யர்தாம்
              சங்கையோர் பாரர் தாமும் ஜனங்களின் மூப்பர் தாமும்
              பின்கையாய்க் கட்டித் தாமே பிலாத்திடங் கொண்டே போனார்.

163.யூதாஸின் முடிவு. மத். 27 : 3 - 10.

110.       காத்திருந் தானே யூதாஸ் கவலையோ டோர்பக் கந்தான்
              ஆத்திர மாய்நின் றானே அவர்மறைந் தகல்வா ரென்றே
              காத்திருந் தானே யந்தோ கருணையான் மறைந்தா ரில்லை
              சாத்திரச் சங்கத் தாரின் சதிமிகுந் தீர்ப்பைக் கேட்டான்.

111.        மரணமாந் தீர்ப்பைக் கேட்டே காட்டினோன் மயக்கங் கொண்டான்
              திரணமா யெண்ணிச் செய்த தீங்கினால் மனநொந் தானே
              சரணமே செய்தாச் சார்யர் சாஸ்த்திரியோ ரிடமே வந்தே
              சரணமுன் வைத்தா னந்த முப்பதே சதிக்கா சைத்தான்.

112.       குற்றமில் லாரத் தத்தை காட்டியே கொடியேன் விற்றேன்
              குற்றமே செய்தே னந்தே கொடுந்துரோ கஞ்செய் தேனே
              குற்றமே செய்ய ஏவுங் கொடுங்கா சீதோ வைத்தேன்
              சற்றுநீர் கண்கொண் டென்மேல் எடுந்தய வாயே என்றான்.

113.       அப்படி யானா லென்னோ அதுவோ எமக்கே யென்னோ
              எப்படி நீவிற் றாயோ ஏதுமே யுன்பா டென்றார்
              முப்பது வெள்ளிக் காசை முனிந்துமே தள்ளிப் போட்டார்
              அப்படி யேசென் றால யத்திலெ றிந்தே காசை;

114.       அப்புற மகன்றே சென்றான் ஆங்கொரு மறைவே தேடி
              கொப்பிலோர் கயிறே மாட்டி தற்கொலை புரிந்தா னந்தோ!
             அப்புறம் முடிவே தென்றால் அதிமிகப் பரிதா பந்தான்
             குப்பு விழுந்தா னந்தோ குடல்சரிந் தழிந்தா னன்றோ!

115.       பவந்தீர் பலியே யாக பாதகன் விற்றா லுந்தான்
              பவம்போக் காட்டை யேதான் பாதகன் காணான் மெய்யாய்
              பவந்தீர் மார்க்க மோதான் பார்த்ததில் துரோக மென்னும்
              பவமுமே தன்னைக் கொல்லும் பாவமுஞ் செய்தா னந்தோ!