பக்கம் எண் :

334

 

116.       மறுகியே யழுதா னேசா மனமோ மாறக் காணான்
              உருகியே சவுல்சொன் னானே உணர்ந்தில னுண்மை யாயே
              இருவரும் நடந்த மார்க்கம் இவனுமே சென்றா னந்தோ
              வெறுமனக் கசப்பே யல்ல மெய்மன மாறல் வேண்டும்.

117.       முப்பது வெள்ளிக் காசே மூப்பரே கண்டா ரங்கே
              இப்படி வந்த காசோ இரத்தக் காசே யன்றோ
              எப்படி யிதைக்கா ணிக்கை யோடுமே சேர்க்க வாகும்
              தப்பித மாங்கா சீதே தள்ளுவோ மீதை யென்றார்.

118.       இக்கா சையென் செய்வோம் எனஅவர் யோசித் தாரே
              அக்கா சைக்கொண் டன்னோர் குயவணின் நிலங்கொண் டாரே
              அக்கா லந்யர் தம்மை யடக்குமே செய்தற் காயே
              அக்கெல் தாமா வென்பேர் அதன்பொருள் ரத்தப் பூமி.

119.       மகித்தன ரிஸரா வேலின் மகிபனாம் மேசை யாவை
              விதித்தனர் முப்பத் தென்றே அவர்விலைக் கிரையத் தைத்தான்
              கொடுத்தன ரந்தக் காசை குயவனின் நிலத்துக் கென்றே
              தொடுத்தவே தத்தின் வாக்கே தொடர்ந்தே நிறைவே றிற்றே.

164.பிலாத்துவின் விசாரணை.
மத். 27; 2; 11 - 14; மாற். 1 : 5; லூக். 23 : 1 - 7; யோ. 18 : 28 - 38.

120.       கொண்டுபோ னாராச் சார்யர் குழுமியே யதிபன் வீடே
              அண்டிவந் திருந்து மன்னோர் அரமனை வெளியே நின்றார்
              பண்டிகைப் பலிபட் காவைப் புசிக்கவே தீட்டில் லாதே
              கண்டனன் பிலாத்திக் கூட்டம் கடிதினில் வெளியே வந்தான்.

121.       வந்தகா ரணமே யாதோ வந்ததைச் சொல்லு வீரே
              இந்தவோர் மனுடன் யாவன் ஏன்கொணர்ந தீரே கட்டி
              அந்தமா னுடனோர் குற்ற வாளியோ அதுசந் தேகம்
              என்தனுக் கறிவிப் பீரே என்பிழை செய்தான் என்றே.

122.       இவனப ராதி யின்றேல் ஒப்புவி யோமே யிங்கே
              இவனப ராதி தானே ஒப்புவித் தோமே யிங்கே
              இவனப ராதி யானால் இவனைவி சாரித் தேநீர்
              அவனப ராதத் துக்காய் ஆக்கினை செய்மின் நீரே.