பக்கம் எண் :

திரு அவதாரம்335

 

123.       தெய்வமைந் தன்கா னென்றான் தெய்வதூ ஷணமே சொன்னான்
              தெய்வதூ ஷணஞ்சொல் வோர்க்கே தெண்டம் மரணந் தானே
              தெய்வகற் பனையே போலே தண்டனை செயவெங் கட்கே
              எவ்வித அதிகா ரந்தான் இலையே யிக்கா லத்தில்.

124.       ஆதலா லிவனை நீரே அட்டியே செய்யா தேதும்
              போதலே விசாரிப் பீரே புண்யமு மக்குண் டாமே
              ஏதுமே ருசுவென் றாலும் கொடுப்போ மிப்போ தேயாம்
              ஆதலாற் பிலாத்தென் போனே யாசனத் தேயுட் கார்த்தான்.

125.       அதிபனின் முன்னால் நிற்க அதிபதி காட்டிச் சொன்னார்
              அதிபனாங் கிறிஸ்தே யென்னு மரசனே கானென் றானே
              அதிபராம் ராயர்க் கேதும் வரியுமே செலுத்தா தீரே
              அதிகா ரியேயா னென்றான் அதிகல கஞ்செய் தானே.

126.       பதியுரை மாந்தர்க் குள்ளே படுகல கஞ்செய் தானே
              சதிமிக வுள்ளோ னீவன் சத்துரு ராயர்க் கேதான்
              அதிபனின் முன்னிவ் வண்ணம் அதிகொடுங் குற்றஞ் சாட்ட
              எதிர்மொழி யாதுஞ் சொல்வா திறைவனோ மௌனங் கொண்டார்.

127.       விசாரணை செய்தான் ஜேசை வேந்தனோ நீயென் றானே
              விசாரணை யேசெய் தானே வேதியர் மற்றுள் ளோரை
              விசாரணை யேதென் றாலும் வீணென அறிந்தா னீவன்
              விசாரணை யாவுஞ் செய்ய யாதுமே விகற்பங் காணான்.

128.       எத்தனை யோகுற் றங்கள் இவருரைக் கின்றா ருன்மேல்
              அத்தனை யும்மெண் ணாதே யமைதியா யேனிற் கின்றாய்
              உத்தர வென்றுஞ் சொல்லா திருக்கிறா யூமை யாயே
              அஃதவர் சொல்கின் றார்போல் அரசனோ வென்றே கேட்டான்.

129.       என்னையே குறித்தே நீராய் இப்படிச் சொல்கின் றீரோ
              என்னையே குறித்தே மற்றோர் இவ்வித மேசொன் னாரோ
              என்னஓய் யூதன் யானோ என்னிடங் கொண்டே வந்தார்
              உன்னுன் ஜனாத்தார் தாமே உம்முயர் ஆச்சார் யர்தாம்.