130. செப்புவா யெனக்கே நீயே செய்ததே யாதென் றானே இப்புவிக் குரித்தே யல்ல என்னுட ராஜியந் தானே இப்புவிக் குரித்தே யாயின் யூதரி டத்தில் யானே ஒப்புவிக் கப்ப டாதே என்னுட வூழ்யர் தாமே. 131. தப்பிலா தின்னோ ரோடே போர்செய் திருப்பார் மெய்யே அப்படி யிலையே பாரும் அவ்விதம் நினையா தீரே இப்புவிக் குரித்தே யல்ல என்னுட ராஜியம் என்றார் அப்படி யானால் நீயோர் அரசனோ என்றே கேட்டான். 132. சத்திய மேசொன் னீரே யானொரு ராஜன் தானே சத்தியத் தைப்பற் றித்தான் ஜெனித்தேன் சாட்சி சொல்ல இத்தரை வந்தேன் மெய்யே யிந்தமா நோக்கந் தானே சத்யவா னெவனோ என்தன் சப்தமே கேட்கின் றானே. 133. சத்யம் என்றே சொன்னாய் சத்தியம் என்னோ என்றான் உத்தரஞ் சொல்முன் னாலே உள்ளிருந் தேவந் தானே அத்திரு வாயங் குற்றோர் அர்ச்சகர்க் குரைத்தா னீதே இத்தகை மனுடன் மேலே யேதுமே குற்றங் காணேன். 134. திடுமென என்சொல் கின்றீர் தீயவ னவனே யென்றோ கடுமப ராதீ யீவன் காலிலீ திசையெல் லாமே நடுத்திசை கடந்தே யூதா நாடிதி லெவணுந் தானே தடபுட லாய்ப்போ தித்தான் ஜாதியே கலங்கச் செய்தான். 135. கலிலீ யெனும்பேர் தானே காதினில் விழவே யன்னோன் கலிலீ யதிபன் நாட்டின் கலிலெய னென்றே கண்டே எழில்பதி யெருசா லேமில் இறங்கிய ஏரோ தென்னும் கலிலீ யரசன் முன்னா லனுப்பினன் கடிதிற் றானே. 165.ஏரோதுவின் விசாரணை. லூக். 23 : 8 - 12. 136. இயேசுவைக் குறித்தே ரோதே கேட்டிருந் தானே மிக்க இயேசுசெய் யடையா ளங்கள் இனிதுகா ணுவதற் காயே பேசியே வெகுநா ளாயே பேரவா கொண்டே தானே இயேசுவைப் பலநாட் காண இனிதவாக் கொண்டா னன்றோ! |