பக்கம் எண் :

திரு அவதாரம்337

 

137.       கண்டது மேரோ தேந்தல் கனமகிழ் வேகொண் டானே
              விண்டுவி னவினா னப்போ பல்விட யங்கள் பற்றி
              ஆண்டவர் மாறுத் தாரம் அருளவே யிலையே யாதும்
              ஆண்டுள ஆச்சார் யர்தாம் அதிகமே குற்றஞ் சொன்னார்

138.       பார்த்தன னேரோ தேந்தல் பார்த்திபன் மௌனத் தைத்தான்
              போர்த்தனன் மினுக்கா மாடை போலிரா ஜன்போற் செய்தே
              பார்த்திபன் தமைநிந் தித்தான் மிகப்பரி காசஞ் செய்தான்
              ஆத்ரமா யமலன் ஜேசை யனுப்பினான் பிலாத்தண் டைக்கே

139.       கொற்றவன் வீரர் கையில் குரங்குகை மாலை யானார்
              அற்றதைப் பிய்த்துப் பின்னு மலங்கோ லஞ்செய் தாற்போல்
              கொற்றவ னைச்சூழ்ந் தாரே குடுமியை யிழுத்தார் பிய்த்தார்
              மற்றுமே கோரங் கள்தாம் தம்மனம் போற்செய் தாரே.

140.       இதுவரை பசைஞ ராயே யிருந்தபி லாத்தெ ரோதே
              இதுமுத லானார் ஸ்நேகர் அதிசய மாமோ ஈதே
              புதுமையோ புவியிங் கேயே புரியவே பொல்லாப் பேதும்
              குதூகலமோ டேதான் யீர்வர் குழைந்துமே சேர்வா ரன்றோ

166.பிலாத்துவின் மறு விசாரணை.
மத். 27 : 15 - 31; மாற். 15 : 6 - 20; லூக். 23 : 13 - 15; யோ. 18 : 39; 19:1
வேறு

141.       கூடிவரச் செய்தனன்பி லாத்ததிபன் கூடியுள அர்ச்சகர்மூப் பர்சனமே
              நாடியிந்த மானுடனைக் கொண்டுவந்தீர் நாடெவணு மேகலகஞ் செய்வனென
              தேடிவிசா ரிக்கவுமே காரியத்தை குற்றமேதெ ரிந்ததில்லை யின்னனிடம்
              சாடியேயே ரோதிடம னுப்பவுமே சற்றெனுமே குற்றமேதுங் கண்டிலரே

142.       மரணமதற் கானதொரு குற்றமுமே யெவ்வகையிற் கண்டதில்லிம் மானுடன்மேல்
              தருணமாமிப் பண்டிகையிற் றப்பாதோர் குற்றவாளி யேவிடும்வ ழக்கமுண்டே
              தருணமிதிற் றண்டனையே செய்திவனைத் தப்பவுமே விட்டுவிடு வேன்எனவே
              பரபரப்பாய் கூக்குரலிட் டார்பரபா ஸென்பவனை விட்டிவனைக் கொல்லுமென.

143.       பரபாஸோ கள்ளன்கல கக்காரன் படுகொலையுஞ் செய்தகொடுந் தோஷியேதான்
              கரங்காலிற் பூண்டுதளை காவலியே கடுந்தண்டனை யேயடையக் காத்திருந்தோன்
              சிரமமிலா தேயிவனோ சீக்கிரமாய்ச் சிறையின்றே நீங்கவிடற் றக்கதுவோ
             பரன்மகனார் நிர்மலனாஞ் ஜேசுபரன் படுமரண மேசகிக்க வேண்டியதோ.

144.       கூப்பாடே போட்டனர்தி ரள்ஜனமே கொல்லுவீரே குரூசினிலே யென்றிறைந்தார்
             ஆர்ப்பாட்டந் தாங்காதே யுட்சென்றான் அஞ்சினன்நி யாயமான தீர்ப்பிடவே
             பாற்பட்ட நெஞ்சனையே கட்டியுமே வாரினால டித்தனனே மாபழிப்பாய்
             போர்த்தாரே செவ்வுடுப்பே சேவகரே சூட்டினரே பொன்சிரசில் முள்முடியே.

145.       தாழ்த்தினர வர்முனாலே தம்முழந்தாள் தண்டனிட்டார் செய்துபரி காசமுமே
              வாழ்த்தினரே யூதரது ராஜனேநீர் வாழ்கவுயர் க்ருசினிலே யென்றவரை
              தீழ்ப்புமிகச் செய்துபரி காசமுமே தீயபல் நிந்தனையாம் வார்த்தைகளால்
              ஆழ்த்தினரே மிக்கஅவ மானத்தில் அடித்தனர கங்கரத்தால் நிர்மலனை.