146. வெளிப்புறம்வந் தான்திருப்பப் பிலாத்ததிபன் விவரமாக அங்குளோர்க்குச் செப்பினனே வெளிப்படையாய்க் குற்றமேகா ணேனெனவே வெளியரங்க மாயறிய நீவிருமே வெளிப்புறமே யும்மிடமிம் மானுடனை விரைந்துமேயான் கொண்டுவந்தேன் என்றனனே வெளிப்புறம்வந் தார்பரணன் றோர்முனாலே விளங்கியவோர் முண்முடிசெவ் வங்கியொடே. 147. இவரிவிதக் கோலமாய்வெ ளிப்படவே பாருமிதோ இம்மனுடன் என்றனனே சிவப்பங்கி முண்முடியே பார்த்தவரே செந்துணிகாண் மாடுபோலே சீறினரே இவணின்ற கற்றுவீரே யப்புறமே யேற்றுவீரே குரூசினிலே யேற்றுமென்றார் அவர்கத்திக் கூக்குரலு மிட்டனரே யம்மனையி டிந்துவிழு மென்றெண்ண. 148. கொண்டுபோவீர் குருசினிலே நீரறைவீர் குற்றமெதும் யானிவன்மேற் கண்டதில்லை உண்டெமக்கே யோர்பிரமாண மென்றுமக்கே யாமுரைத்தோ மேற்கனவே நீரறிய கண்டதாம்பிர மாணமதே சொல்வதேபோற் கடுமரணத் தீர்ப்படைந்து சாகவேண்டும் விண்டனனே தெய்வசுதன் தானெனவே விட்டுவிடல் ஞாயமல்ல என்றனரே. 149. பயந்தனன்பி லாத்திதனைக் கேட்டவுடன் பரபரப்பா யுட்புகுந்தான் ஜேசுவொடே நயமொடுமே ஜேசுவையே நோக்கியிவன் நவின்றனனே வந்ததுநீ யெங்கிருந்தோ பயமிலாத ஜேசுபரன் கேள்வியிதற் கோர்பதிலுஞ் சொல்லாதே மௌனமானார் பயமுறுத்த எண்ணமுமே கொண்டவனாய்ப் பகர்ந்தனனே தன்னதிகா ரத்தையுமே. 150. பதலேதுஞ் சொல்லாயோ இப்பொழுதில் பார்ப்பாயே யென்னுடைய வல்லமையே அதிகார மேதுமிலை யோவெனக்கே யுன்னையேய றைவதற்கே குரூசினிலே அதிகார மில்லையென வெண்ணினையோ அப்படிச்செய் யாதுவிட வுன்தனையே மதியிலையோ ஈதெலாம றிந்திலையோ அப்படிச்செய் என்றனன்பி லாத்துவுமே. 151. அதிகார முண்டுமக்கோ என்தனின்மேல் அம்பரத்தி னின்றுமேபெ றாவிடிலோ அதிபாவ முள்ளவனே யம்மனுடன் என்தனையநி யாயமாயே யொப்புவித்தோன் பதிலாகச் சொன்னதவ ரிவ்வளவே பின்னெதும்ப கர்ந்ததில்லை தற்பரனே அதின்பின்னால் விட்டுவிட வேயவரை செய்தனன்பி லாத்ததிக மாமுயற்சி. 152. இதுதெரிந்தே கொக்கரித்தார் யூதருமே யெரிச்சலோடே பேசினார்பி லாத்துவையே இதுவுமது ராஜவிசு வாசமாமோ விடுதலையே செய்வதெனில் நீரிவனை புதுமையிதே ராயனது நேசனோநீர் அதுவிதம்பு கன்றீரேல் பொய்யாமே எதிரியாயே தன்னையர சென்பவனோ இவன்விரோதி ராயர்க்கே யென்றறியும். |