153. தளர்ந்தனன்ம னத்திடமு மேயிழந்தே தைரியமே விட்டவனை நீங்கியதே இழந்தனன்நி தானமான யுத்தியுமே யிங்கிதமாய் நீதிசெய்ம னோநிலையும் எழுந்தனனே யுள்ளறைவிட் டேவெளியே யேசுவையுங் கொண்டுவந்தே தன்னொடுமே தளவரிசை மேடைகபத் தாவினிலே யேறியமர்ந் தானவனே யாசனத்தில். 154. பார்த்தனன்ப ரீகசித்தான் யூதரையே பாருமிதோ உங்களுட ராஜனென்றே ஆர்த்தனரே யாவரும கற்றுமேய கற்றுவீர்கு ரூசினில றைகுவீரே வார்த்தனன்நா ராசமேய வர்செவியில் வன்குருசி லேற்றலாமோ உம்மரசை தீர்த்துளேமே ராயனலால் வேறெவனும திட்டமாயே யெம்மரச னாவதில்லை. 155. இந்நிமிடம் வந்தனனங் கோர்மனுடன் இன்னவனின் தேவியுட ஊழியனே அன்னவனே சொல்லினனே யோர்ரகஸியம் தேவியவள் சொல்லியதாஞ் செய்தியையே முன்னிதோநிற் கும்பெரியார் நீதிபரன் தீதெதுமு னிந்தவர்க்குச் செய்யாதீர் இன்னவர்க்கா யின்றிரவிற் பாடுமிக வுற்றதெனக் கென்றவனாற் சொல். 156. குருரராமாச் சாரியரும் மூப்பருமே சற்குருவைக் கொன்றுவிடக் கேட்கவுமே திருடனையே விட்டுவிடக் கேட்கவுமே தீயராஞ்ஜ னத்திரளை யேவினரே இருவரிலு மக்கெவனை விட்டுவிட யேசுவையோ திருடனையோ என்றுரைக்க திருடனேதான் யாங்குறிக்கு மானுடனாந் தீர்த்தவனை விட்டுவிடும் என்றனரே. 157. எண்ணம்நிறை வேறாவி கற்பமாகும் இம்மொழியைக் கேட்கமனஞ் சோர்ந்தனனே எண்ணியேநீர் சொல்லுவீர்கி றிஸ்தெனுமிவ் யேசுவையான் என்செயவோ என்றனனே திண்ணமேகு ரூசினிலே யேற்றுமென தீங்கெனசெய் தானெனவே சாற்றுமென எண்ணமேசெய் யாதுகுரு சேற்றுவீரே யேற்றுவீர்குரு சினிலின்னோ னையென்றார். |