பக்கம் எண் :

340

 

158.       கூக்குரலிட் டாரவரே கொல்லுமென கொக்கரித்தா ரேயவர்கள் பித்தரேபோல்
              பார்க்கவேறு மார்க்கமில்லை யென்றறிந்தான் வீணதேப லிக்கவில்லை யென்றறிந்தான்
              நோக்கினான்கு ழப்பமிக வோங்கவுமே நுட்பமான வேறுவழி தோன்றவில்லை
              ஏற்கனவே யங்கிருந்த தண்ணீரை யேயெடுத்த லம்பினனே தன்கரங்கள்.

159.       இவனொருமா நீதிபரன் குற்றமிலேன் இன்னவன்ரத் தப்பழிக்கா ளல்லனேயான்
              இவனதுரத் தப்பழியே யேற்றருளும் என்னைவிட்டும் மேல்வரவே யென்றனனே
              இவனதுரத் தப்பெழியெம் மேலுமெங்கள் மக்களின்மே லும்வருக என்றனரே
              இவர்மதியோ யானைநிகர் துன்மதியே தஞ்சிரங்கள் மேலெறிந்தார் கேடெனுமண்.

160.       திருடனான பரபாஸென் பாதகனை சிறையினின்றே விட்டுவிடத் தீர்த்தனனே
              திருமகனாஞ் சற்குருவே ஜேசுவையோ சிலுவையினிற் கொன்றுவிடத் தீர்த்தனனே
              அருகுளரா மர்ச்சகரா னந்தராக அனைவருங்கெம் பீரமாக ஆர்ப்பரிக்க
              திருகுமனங் கொண்டவன்பி லாத்ததிபன் திடுமெனவுட் சென்றனனே கள்ளனேபோல்.

161.       குற்றமற்றே னென்றுமேநீ சொன்னாயே குறுவிழியோ குள்ளறையே சொல்லுவதேன்
              குற்றமற்றே னென்றனையே யுன்மனமே குறைவிலாதே யப்படியே சொல்கிறதோ
              குற்றமேது மில்லையெனச் சொல்லியும்நீர்க் ரூரமாயே குருசறையத் தீர்த்தனையே
              குற்றமற்றா யோபழியுன் மேலிலையோ பழிவிடாதே யென்றுமுனைக் குற்றமுமே.

162.       நீதிமான்போல் நின்றனையே பேசினையே நீசனைப்போ லேவதைத்தல் நீதியோசொல்
              நீதிபரன் குற்றமிலான் என்றனையே நீயுரைத்த தோர்தரமோ பல்தரமே
              நீதிபரன் விட்டுவிடு வேனென்றனை நீநிலாதே யென்பொடிந்தே வீழ்ந்தனையே
              நீதிபரன் மானவேகு ரூசினிலே தீர்த்ததொரு தீர்ப்பேமா நீதியோ சொல்.