163. நேர்மையான மார்க்கமனச் சாட்சிசொல நீங்கியுமே நேர்வழிவிட் டேவிழுந்தாய் நேர்மைமிகு முன்மனையா ளெச்சரித்தும் நீதியிலாத் தீர்ப்பேநீ கூறினையே ஓர்மையே யிலாமனதோய் உன்தனுட உட்திடமி ழந்துமேநீ கோளையானாய் பார்தனிலே பாதகனென் போபடைத்தாய் பாரிதிற்பெற் றாயழியாப் பேர்வசையே. 164. பயந்தனைகு ழப்பமேசெய் வாரெனவே பயந்தனையே பாரிதனிற் பேர்வசையே பயந்தனையே மேன்மைபொருள் போமெனவே பயந்தனையே பாரிதனிற் பேரிழிவே பயந்தனையே யுத்தியோகம் போமெனவே பயந்தனையே நீதியேகு ரூசினிலே பயந்தனையே ராயன்தயை போமெனவே பயந்தனையே தோஷமேதான். 165. கூட்டியேயுட் சென்றனர ரண்மனையுள் கொலுமண்டபந் தானிருந்தே ஜேசுவையே கூட்டினரே சேவகரின் கூட்டமெல்லாம் பரிகரிக்கக் கொற்றவனைக் குரூரமாயே காட்டினரே யாசனமொன் றேற்றினரே கரத்தினிலே சேர்த்தனரோர் கோலையுமே கூட்டமாயெல் லோருமேப ணிந்தனரே குனிந்துமுழந் தாள்முடக்கிநிந் தைசெய்தார். 166. மன்னவனே வாழ்கயூத ராஜனேநீ மாமகத்வ யூதரின்ம கத்துவமே மன்னவாவுன் ராஜியமே யெங்குளதோ மன்னவனே யுன்கிரீடம் முண்முடியோ மன்னவாஇக் கோலுனது செங்கோலோ மன்னவனே குரூசேயுன் னாசனமாம் மன்னவனுக் கீதுமரியா தையேயென் றொச்சினார வர்சிரமேற் கோலினாலே. 167. முகத்தின்மேல் ரத்தமேக சிந்தொழுக முகமேலே சீயெனவு மிழ்ந்தனரே அகத்தினிலே யீரமிலாத் துட்டரிவர் அவமானம் நிந்தையுமே செய்துபினால் மகத்துவமா மங்கியைக்க ழற்றியேபின் னணிந்தனரே மன்னனுக்கே தம்முடையை ஜெகத்தின்பா வச்சுமையை யேற்றினர்போல் சிலுவைமரந் தோளின்மே லேற்றினரே. |