பக்கம் எண் :

342

 

167.சிலுவைப் பாதை.
மத். 27 : 32; மாற். 15 : 20, 21; லூக். 23 : 26 - 32; யோ. 19 : 16, 17.

168.       போர்வீரர் முன்பினுமாய்ச் சென்றனரே போகவிரு பக்கமுமே சென்றனரே
              பார்மீட்க வந்தவர்த ளர்ந்துநடை பாரமாங்கு ரூசெடுத்தே சென்றனரே
              ஆத்தாரே பின்தொடர்ந்தே மன்னவனை யங்குரோராந் தீயவரு மீனருமே
              கார்மேக மூடியதோ ராதவன்போல் காவலனே தாண்டினரே யம்பதியை.

169.       கூடினார்கு ணம்மிலாத பேதையரே கொற்றவனின் வாதைகண்டே தாமகி
              சாடினார்வை ராக்கியரா மானுடரே சற்புருட னந்தியங்கண் டேமகிழ
              பாடினார்வ சைக்கவியே யீனஜனம் மாபரம சாதவர்மேல் நித்னையாய்
              நாடியேகண் ணீரொடுமே பின்தொடர்ந்தார் மாவெழில்சா லேம்நகரின் மாதருமே.

170.       சின்னாள்முன் சென்றவரைப் பின்தொடர்ந்தோர் சீர்மிகப்பு கழ்ந்தவரைப்
              அந்நாளில் தாவிதின்மைந் தாவெனவே யூதருட வேந்தனேநீர் வாழ்கவென்றே
              மன்னவோ சன்னாவென் றேற்றினோரே மாபரனுக் கோசன்னாப் பாடினோரே
              இந்நாளி லோவிழிவாய்த் தூஷணைசெய் தெங்கள்குல ராஜனோநீ யென்றனரே.

171.       விண்ணவரின் வேந்தனாங்கி றிஸ்துவையே வினையறுக்குமோர் பலியாகக்
                                                                                                                                                                          கொண்டுபோனார்
              மன்னவர்க்கும் மன்னவனாஞ் ஜேசுவையே மறைவிதிக்கும் யக்கியமாய்க் கொண்டுபோனார்
              மண்ணவரின் மன்னவர்ம காதிபனை வளர்குருசி லேவதைக்கக் கொண்டுபோனார்
              மண்ணவருக் கோர்கதியாய் வந்தவரோ வான்பலியே யாவதற்காய்ச் செல்கிறாரே.

172.       பாவியருக் கேயடையா ளம்பரபாஸ் பாவியரின் போக்காடாம் போகிறாரே
              காவதாங்கெத் சேமெனேயில் ஆன்மமதில் தாக்குகன துக்கத்தால் வீழ்ந்தனையே
              மேவியக பத்தாவில் மேனியுற்ற வேதனையை யெவ்விதமாய்த் தாங்கினையோ
             காவலனே கொல்கொதாவுக் கேகும்வழி கடுங்குரூசைத் தாங்காது வீழ்ந்தனையோ.