பக்கம் எண் :

திரு அவதாரம்343

 

173.       பார்புரக்க வந்தவரா மன்னவனார் பாரக்குரூ சேந்தியேப டுந்துயரம்
              பார்த்தறிவாய் பாவியுனின் மாபலமாம் பாரச்சுமை யேயதுவே பாழகுருசாம்
              பார்ப்பவர்ம னங்கலங்க மன்னவனார் பாரின்மேற் றள்ளாடி வீழ்வதையே
              பார்த்துமேசெல் தோஷியராம் பாதகரோ பார்த்துமேமி கப்பரிகா சஞ்செய்தார்.

174.       பார்த்தனரே வீழ்ந்தெழவே சேவகரே பாரத்தால் மாறிமாறி வீழ்வதையே
              பார்த்திபன்பொன் மேனியனோ தான்தனியாய்ப் பாரமேந்திச் செல்லுதலே லானதுவே
              பார்த்தவராஞ் சேவகரென் செய்வதென யோசனையே செய்யஅதோ பார்த்தனரே
              ஓர்புருடன் சைமனெனும் பேருளனாம் இம்மகற்கன் னோனுதவி யென்றனரே.

175.       ஓடியேபி டித்தவனைக் கொண்டுவந்தார் ஓர்வனாகப் பாதையிலே சென்றவனை
              நீடியகு ரூசினுட பாரத்தை நிர்மலனுக் காதரவாய்த் தாங்கவுமே
              வாடிமனு மைந்தனேதாம் முன்சுமக்க வன்குருசின் பின்னடியை யேற்றினரே
              கூடியவன் முன்னவனின் பின்சுமக்க கொற்றவனுக் கேயுதவி யாசிபெற்றான்.

176.       திரள்ஜனத்தி னாலெழும்புஞ் சந்தடியுந் தீயவர்சொற் றூஷணையின் சந்தடியும்
              பிரளயத்தி ரைச்சலென வோங்கிடினும் பின்வருவோர் மாதரழுஞ் சிற்குரலோ
              அறனுருவா னினசெவியி லேபுகுந்தே யன்னவர்க்க ருள்புரிய ஏவினதே
              மறந்தீர்க்க வந்தவராம் கன்னிமகன் மரந்தூக்கிச் சென்றபொழு தினிலேயாம்.

177.       எருசலேங்கு மாரியரே நரெனக்காம் இரங்கியழ வேண்டியதில் லுங்களுட
              அருமைமிகு மக்களுக்காய் உங்களுக்காய் அழுதுமேபு லம்புவீர்கண் ணீர்விடுமே
              வருமேயோர் காலமேயக் காலத்தில் வருகநீவிர் பாக்கியரே யானவரென
              றருங்குழவி பெற்றெடாத பெண்டிரையும் அழுகுழந்தை யேயிலாத தாயரையும்.