பக்கம் எண் :

344

 

178.       லக்ஷியஞ்செய் யாதுவரு மிந்நாளில் லக்கெனவெம் மேல்விழுவீர் கன்மலைகான்
              குச்செனவே குன்றுகள்ம றைப்பீரெனக் கூவியேபு லம்பியெழு வாரந்நாள்
              பச்சைமர மாயினேனே சத்துள்ளேனே பட்டமர மானவர்நீர் சத்திலாரே
              பச்சைமரத் துகிவையே செய்வரெனில் பட்டமரத் துக்கென்செய்வா ரென்றனரே.

179.       கொற்றவனை யேகொணர்ந்தா ரக்கொடியோர் கொல்கொதாவி லேகுருசிற் கொல்லவுமே
              கொற்றவனோ டேதிருடர் ஈர்வரையே கொண்டுவந்தார் குரூசுகளி லேயறை
              பற்றிலார்ப ரீகசிப்போர் பாதகரோ பல்வகுப்பார் பல்ஜனம்பல் லாயிரம்பேர்
              பற்றுபரி தாபமுளோர் சிற்சிலரே பாங்கொடுமே கூடினரே யக்குன்றில்

168. கொல்கொதா.
மத். 27 : 33 - 56; மாற். 15 : 22 - 41; லூக். 23, 33 - 49; யோ. 19 :
18 -30.

180.       மேனின்ற குரூசையே யிறக்கியேபின் மன்னவனை மெல்லியனை நேர்நிறுத்தி
              கானின்ற மானுடர்நிர் வாணியருக் காடையணிந் தேமகிமை செய்தவரை
              மேனின்ற வஸ்திரமெல் லாங்களைந்தே நிர்மலனை யேயவமா னஞ்செய்தார்
              வானின்றே வந்தவராம் லல்லபரன் மௌனமாய்ச்ச கித்தனரே நிந்தையை.

181.       பாவத்தால் நிர்வாணப் பாவியரே பரத்திலேநீர் மகிமையுளோ ராவதற்கே
              மேவியுமே நீரணிய நீதியெனும் வெள்ளுடையே யுங்களுக்கே தந்தருள்வே
              பாவமிலார் தெய்வசுதன் தூயரவர் பாதகராம் பாவியரின் கண்முனாலே
              மேவியதோர் நிந்தைமிகு கோலத்தை நீர்நினைந்துள் ளம்நொறுங்கி மாறுவீரே.

182.       குருசிலறை யுண்டவருக் குள்ளதொரு கொடியவேதை யேயுணரா தேயிருக்க
              எருசலேமின் மாதரின்க ருப்புரசம் இவர்பருகி யேசகிப்பார் மதிமயங்கி
              குருபரனுக் கிக்காடி யேகொடுக்க சிறிதெனுமே குன்றாதே பூரணமாய்
              குருரமிகும் வேதையைச் சகிப்பதற்காய் மறுத்தனர தைப்பருக கொற்றவனே.