பக்கம் எண் :

திரு அவதாரம்345

 

183.       குருசினையே புவிமேலே நீட்டியதிற் குருபரனைக் குற்றமேபோக் காடவரை
              மருவிலாத மறியவரை யேசுவையே மலர்முகமே னோக்கியேம லர்த்தியுமே
              இருபுறமா யிருகரங்கள் நீட்டியுமே யிருப்புமுட்க டாவினர்க ரங்களிலே
              திருமலரா மடிரண்டுஞ் சேர்த்தவற்றைச் சிலுவைமரக் கீழ்முனையி லேயறைந்தார்.

184.       இருப்புமுட்கள் கால்கரங்க ளூடுருவ இழைந்தனவே தாங்கவேலா வேதனையே
              பொருப்பரோமற் றாருமேயவ் வேதனையே பொருத்துமேப ரிந்தவர்க்காய் வேண்டினரே
              பொருத்தருள்வீர் மன்னியுமீ வர்பிழையை பொறுமைமிகுந் தந்தையேயி ரங்குவீரே
              நெருப்பெனஅ றிந்திலார்தஞ் செய்கையென நிர்மலன்ஜெ பித்தனரிப் பாவியற்காய்.

185.       தூக்கினரே நீள்குருசை யண்ணலொடுந் தொப்பெனப்போட் டார்முன்னரே
              தாக்கவேகு ரூசினடி கல்லையுமே சட்டெனவ திர்ந்ததேச டங்குலுங்கவே
              தூக்கியதாந் தேகத்தை யாணிகளிற் றொங்கவைத்தே கொற்றவனாம் நிர்மலர்க்கே
              ஆக்கியவோர் வேதையேபொ றுக்கவுமோ எண்ணவுமோ சொல்லவுமோ கூடியதில்.

186.       திருடரான இருவரையு மேபிடித்தே சிறியவையா மிருகுருசி லேயறைந்தே
             இருபுறமா யிருவரையுந் தொங்கவைக்க இவர்நடுவே திருமகனார் தொங்கினாரே
              குருபரனார் பெரும்பிழையீ ழைத்தாரென குறைவிலாதீ யறையுலகி தேமதிக்க
              ஒருவராவா ரக்கிரமக் காரருளே எனமதிப்பார் எனுமுறையே பூர்த்தியுற

187.       காட்டினனே யாக்கினையின் காரணமே காண்பவரெல் லோருமேய றிந்துகொள
              தீட்டினன்பி லாத்துமேயோர் வாசகமே தீர்க்கமாயீப் ரூகிரீக்லத் தீன்மொழியில்
              நாட்டினன வர்சிரமே லவ்வசனம் நாசரேத்தான் யசிவனோ யூதரின்கோன்
              நாட்டியமே யாடினர்கண் டர்ச்சகரே நாமிதனைச் சீக்கிரமே மாற்றவேண்டும்.