பக்கம் எண் :

346

 

188.       அவசரமாய் வந்தனரே யர்ச்சகரே ஆதிபன்பி லாத்துவையே வேண்டினரே
              கவனமொடுங் கேண்மினெமின் சொல்லிதையே காரணமென் றேற்றியவும் வாசகமோ
              அவமான மாக்குகின்ற தேயெமக்கே யூதராஜ னென்றவனைச் சொல்வதினால்
              அவன்சொலின் யூதரின்கோன் தானெனவே யென்றதனை மாற்றுமென வேண்டினரே.

189.       அவன்சொலின னென்பதுமோர் குற்றமாமோ அதற்குரிய ஆக்கினையோ குரூசறைதல்
              அவனரசன் ராயருக்குச் சத்துருவென் றவற்களித்தே னாக்கினையாந் தீர்ப்பிதனை
              அவமான மாகிலுமக் கெனக்கெனவோ மாற்றுவதில் தீட்டியதோ தீட்டியதே
              இவனேநீர் நிற்பதினா லில்லைபயன் ஏகுவீரே யென்றனுப்பி னானவரை.

190.       பங்குவைத்தா ரேயவரின் வஸ்திரங்கள் பங்கேநான் காக்கினர்நாற் சேவகர்க்கே
              அங்கியையெ டுத்தனரே பங்குவைக்க அங்கிதைய லில்லாத அங்கியாமே
              பங்கெவருக் காகுமென வேயறிய பாங்கொடுசீட் டங்கியின்மேற் போட்டனரே
              பங்குவைத்தென் வஸ்திரமு டுப்புகள்மேற் சீட்டிடுவார் என்றுபகர் வாக்கேபோல்.

191.       மரமிருந்தே வீழ்ந்தனைமிதி ப்பதேபோல் பகைத்தனரே நிந்தையுறு வார்த்தைகளால்
              மரத்தின்மேற் றொங்குகிற வானவர்கோன் சடலமுறு வாதைபோ தாதெனவே
              சிரமேலே மாட்டியதாம் வாசகத்தாற் பரிகசித்தான் தீயவன்பி லாத்ததிபன்
              மறவரான ஏனையராம் பல்வகுப்பார் பரிசகித்தார் மன்னவனைப் பல்விதமாய்.

192.       துலுக்கினார்கு லுக்கினாரே தஞ்சிரங்கள் தூவென்றார் அவ்வழியே போஞ்ஜனங்கள்
              பிலுக்கியேயு ரைத்தனையி டித்துமேயிப் பேர்பெற்றதாம் சீரியதெய் வாலயத்தை
              அலுப்பிலாதே முத்தினத்தெ ழுப்புவேனென் றேயறைந்தாய் ரட்சைசெய் யுன்தனையே
              சிலுப்பிலாதீப் போதிறங்கு குரூசினின்றே தெய்வதிரு மைந்தனேதான் நீயெனிலோ.