பக்கம் எண் :

திரு அவதாரம்347

 

193.       பரிகசித்தா ரங்குளதி காரிகளும் பாரகரு மூப்பருமாச் சாரியரும்
              தெரிகிறதே மற்றவரை ரட்சித்தான் தன்னைரட்சிக் கத்திறமே சற்றெனுமில்
              சரியிவனே யிஸரவேலின் ராஜனெனில் ஜல்தியாயி றங்குக்கு ரூசினின்றே
              பிரியமாயேற் றுக்கொளுவோ மேயிவனை நம்பெரியோ னென்றிவனை விஸ்வசிப்போம்.

194.       தெய்வதிரு மைந்தனெனச் சொன்னவனே தெய்வத்தை நம்பியுமே யிருந்தவனே
              தெய்வமிவன் மேற்பிரிய மாயிருந்தால் சேய்தனையே ரட்சியாரோ இப்பொழுதில்
              மெய்யிதுவே யாமிவனை விஸ்வசிப்போம் மெய்யாயே யவ்விதம்ந டக்குமெனில்
              பொய்யன்றோ இம்மனுடன் வார்த்தையுமே பொய்பிரட்டே பிரத்தியட்ச மாயினதே

195.       போர்வீரர் சேர்ந்தனர்மற் றோரொடுமே புண்ணியனைப் பரிகசித்தே பேசினரே
              நேர்வந்தே மீட்பரின்முன் நின்றனரே நீட்டியேகொ டுத்தனரே காடியையே
              பார்வேந்தே நீயெனிலோ யூதருக்கே பண்பொடுமே ரட்சிப்பா யுன்தனையே
              நேர்வார்த்தை யொன்றுமேசொல் லாமோவென் றேயுரைத்தார் சேர்ந்தனரே கள்ளருமே.

196.       பார்த்திதையே தொங்கினோனா மோர்திருடன் புண்ணியனை யேபரிகா சித்தனனே
              பார்க்கலாமே யுன்திறமை கிறீஸ்தெனிலோ பார்த்தெமையு முன்தனையும் ரட்சைசெய்
              நோக்கிமறு கள்ளனுமே யத்திசையாய் மோசமேயுன் புத்தியேயு ணர்விலையோ
              ஆக்கினைக்குட் பட்டிருந்தும் புத்தியில்லை யஞ்சுவாயே தெய்வபய மேயிலையோ.

197.       தண்டனைநி யாயமேதான் நம்மிடத்தே தண்டனைநி யாயமோஅன் னோரிடத்தே
              தண்டனைய டைந்துளமே செய்தவையாஞ் தப்புகளே யாம்புரிந்த வைக்கேற்க
              தண்டனைநி யாயமாய டைவதற்காந் தப்புகளோ யாதுமவர் செய்ததில்லை
             தண்டனைக்குட் பட்டவராம் பாவியர்யாம் தாழ்ந்துமன மாறுதலே மாநலமாம்.