பக்கம் எண் :

48திரு அவதாரம்

 

35.        ஒளியேதா னுலகினிலே வந்திருந்தும் உலகிதோவு வப்பதில்லை யவ்வொளியே
              தெளிவிதுவே யுலகிலுள மானுடரின் செயல்களலாந் தீயவையே யானதினால்
              ஒளியினிலு மேயிருளை யேயதிகம் உவப்பதற்கே காரணமு மீதுதானே
              அழிவளிக்கு மாக்கினையாந் தீர்ப்பதனை யடைவதற்குங் காரணமு மீதுதானே.

36.        ஒளியைப்ப கைக்கிறானே தீமை செய்வோன் ஒளியினிடம் வருகிறதே யில்லையவன்
              ஒளியினாலே கண்டனம்பெ றாதிருக்க உலகிதிலே யவன்செயுமாந் தீமைகளே
              ஒளியாகுஞ் சத்தியம்போற் செய்பவன்தன் செயலெலாந்தெய் வத்துள்ந டப்பதென
              எளிதாய்வெ ளிப்படும்ப டிக்கவனே இனிதொடுவ ருகிறானவ் வொளியிடமே.

37.        ஆவியினுக் கேயுரித்தே வான்ராஜ்யம் ஆவியாற்பி றந்தவன் தன்மகனே
              ஆவியாற்பி றந்தவனின் ஜீவியமே ஆவியால்ந டந்துவருஞ் ஜீவியமாம்
              ஆவியாமெய்த் தெய்வமுட அன்பிதுவே மேவியேகு மாரனைய னுப்பியதாம்
              மேவியேசு தன்புவியிற் றோன்றியதோ இப்புவிரட் சிப்படையமெய் மையாயே.

38.        உலகிதனின் பாவமாமி ருட்டகற்றும் ஒளியதாக வந்தனரே தெய்வசுதன்
              உலகிதனி னாக்கினையாந் தீர்ப்பகற்றி யுலகமேயீ டேறுதற்காய் வந்தவராம்
              உலகிலுள காரிருள்வெ றுத்தெவனும் ஒளியிதையே நம்பிவந்து சேர்வதெனில்
              இலவசரட் சிப்படைந்துய் வானெனவும் அருளொடுமே யின்னுபதே சமபகர்ந்தார்.

22. யோர்தான் தீரஊழியம், ஸ்நானகனின் சாட்சி யோ. 3 : 22 - 36

வேறு

39.        திருப்பதி விடுத்தார் திருக்குரு பரனே
              மறுசெயும் பெருநோய் மறுவறத் தவிர்த்த
              திருநதி யெனுமாந் திவியஜார் டனதின்
              இருமருங் குளதாம் யூதா வடைந்தார்.

40.        அங்ஙன முளதாம் அயினோன் தலமே
              பொங்கிய ஜலமே புரண்டோ டுவதால்
              தங்கியவ் விடமே தமதுசீ டரொடே
              அங்குவந் தவர்க்கே யளிக்கதீ க்ஷையுமே.