41. தீட்சை பெறவே திரள்ஜனம் வரவும் தீட்சை கொடுத்தார் அவருட சிஷியர் தீட்சக னருளன் அவன்சிஷி யரொடும் தீட்சை கொடுத்த திருத்தலம் இதுவே. 42. இருவருந் தீக்ஷையே இதுதலந் தரவே இருவரின் தீக்ஷையா லிடறினர் சிஷியர் இருவரின் தீக்ஷையி லெதுசிறப் பெனவே இருவரின் சீடரே எதிர்வதம் புரிந்தார். 43. திருப்தியில் மனதோர் அருளனின் சிஷியர் பொறுமை யிழந்து பொறாமை யடைந்தார் பெருமன துளனாம் பெரியவ னருளன் அருகினி லடைந்தே அவதிசொல் லினரே. 44. ஒருவரங் கிருந்தார் உமதொடக் கரையில் ஒருவரைக் குறித்தே உரைத்தீர் சாட்சி தருகிறார் அவரே தலமிதிற் றீக்ஷை திரள்மிகு ஜனமே செலுகிறா ரவணே. 45. பெருமன துளோனோ பிறழ்வது முளதோ பொறுத்து யிதற்கே பொறுதிசொல் லினனே பெரியவ ரவரின் பெருமை புகழ்ந்தே மறுதரம் பகர்ந்தான் மகிமை சாட்சியே. வேறு 46. மறுமொழி யுரைத்தன னிதையவர்க்கே பகர்ந்தனன் மகிமையா முயர்சாட்சி ஒருவனு மெதையுமே பெறுவதில்லை யுனதராங் கடவுளே யருளாவிடில் திருப்பரன் கிறிஸ்திலேன் அவர்க்குமுனே திடமொடே யனுப்பப் பட்டவனென் றொருதரம் பகர்ந்தது முளதறிவீர் அதற்குநீ ருறுதியாஞ் சாட்சிகளே. 47. மணமக னானவன் யாவனெனில் மணமக ளுடையயுவ னானவனே மணமகன் தோழனே யாவனெனில் மருங்கினி லிருந்துசொற் கேட்பவனே மணமகன் சப்தமே கேட்டவனும் மகிழ்ச்சிய டைகிறான் மாநலமாய் க்ஷணமதில் யானுமம் மகிழ்ச்சியையே தடையிலா தடைகிறேன் பூரணமாய். |