48. அவர்பெரி யவரே யான்சிறியன் அவர்முனா னிற்கவே தக்கனலேன் அவரெவ ரேதற்கும் மேற்பெருக அவர்முனாற் சிறுகயான் வேண்டியவன் அவருன தமேநின் றேயுதித்தோர் அவர்தா மெவர்க்கும் மாபெரியோர் அவர்முனா னிற்கவே கூடியதில் இதுபுவி யிருந்தியான் தோன்றினவன். வேறு 49. மண்ணினின்று தோன்றியவன் மண்ணியல்புளோன் மண்ணினுக்க டுத்தவையே பேசுகின்றார் விண்ணினின்றி றங்கியவர் விண்ணவராமே மேன்மையுளோர் யாவருக்கு மாதலினாலே விண்ணினிலே கண்டவைகள் கேட்டவைகளை மேன்மையுள சாட்சியாயே கூறுகின்றார் மண்ணிதிலே யன்னவரின் சாட்சியதையே நன்மனதோ டேற்பவனோ யாவனுமில்லை. 50. கடவுளேய னுப்பியதாஞ் சாட்சியையுமே கனமொடுமே யேற்பவனோ யாவனெனிலும் கடவுளேதாஞ் சத்யமுள ராவரெனவே கணிசமாயே முத்திரித்து நிச்சயிக்கிறான் கடவுளேய னுப்பியரா மேன்மையுளோர் கடவுளத வார்த்தைகளே பேசுகின்றனர் கடவுளேதா மன்னவருக் கெல்லையிலாக் கனமிகவே தந்தனர்தம் மாவியையுமே. 51. திருப்பிதாதி ருச்சுதன்மே லன்புவைத்துமே ஒப்புவித்தார் யாவுமவர் திருக்கரத்தினில் திருச்சுதனே யானவர்மேல் விஸ்வசமுளோன் நித்தியமாஞ் ஜீவனையே பெற்றவனலோ திருச்சுதன்மேல் விஸ்வசமே வைத்திராதவன் ஜீவனையே காண்பதில்லை நிச்சயமிதே அருள்மிகுவிஸ் வாசமுமே வைத்திராதவன் மேலமர்ந்து நிற்குமேதான் தெய்வகோபமே. |