பக்கம் எண் :

திரு அவதாரம்51

 

23. ஸ்நானகனின் சிறைவாசம். மத். 14 : 3 - 5; மாற். 6 : 17 - 20; லூக். 3 : 19 - 20.

52.         இத்துடனே ஸ்நானகனாம் ஜானவனுட எழில்வெளிய ரங்கமான வூழியமுமே
              அத்தமித்தே யோய்ந்துவிடும் வேளையதுமே யணுகியதே யன்னவன்மே வோரலையே
              எத்தனெனும் நாலிலொரு பங்கதிபனே கொலைஞனாமெ ரோதுவேனும் பாதகனவன்
              பித்தனிகர் செய்தமதி யீனவினையின் தொடர்ச்சியாயே முற்றியதே தீவினையிதே.

53.        ஏரொதென் மாவரசன் வம்சமதனி லிருந்தனனே யோர்மகன்பி லிப்புவென்பவன்
              ஏரோதந் திப்புவெனு மிவ்வதிபனோ பிவிப்புவனின்சோ தரனே யாயிருந்தவள்
              ஏரோதி யாளோபி லிப்புவுடைய எழிலழகு பெற்றமனை யாட்டியானவள்
              ஏரோதே ரோதியாளை யேயிணக்கியே யிடறியேம ணம்புரிந்தா னின்னவளையே.

54.        நீதமேயில் லாததாமிச் செய்கையினாலே மீறினனேவேதமுறை மார்க்கமதையே
              பேதமாமிச் செய்கையினால் யூதரேமனப் பேதமுமே கொண்டனரே ரோதிடத்திலே
              நீதனாம்யோ வானிதைக்க டிந்துகொண்டனன் நீதியாமோ நீரிழைத்த தீவினையிதே
              மூதுரையாம் வேதவிதி மீறியுமது மூத்தவன்பெண் டீரைமண மேபுரிந்ததேன்.

55.        தமையனது தாரமவ ளேயுமக்கொரு தாரமுமே யாகுவளோ தப்பியற்றினீர்
              தமையனது நாள்முடிந்தே போயிருந்துமே யவளுமக்கே தாரமாகக் கூடியதிலை
              தமையனுமே ஜீவனோடி ருக்கையிலிதோ தவறியுமே போயினீறென் றேகடிந்தனன்
              அமைந்துளவாம் அன்னவனின் தப்பிபலவே யனைத்தையுமே கூறியேக டிந்தனனே.

56.        இதனையே ரோதரசன் கேட்டவுடனே மாசினமே கொண்டெரிந்தான் ஸ்நானகனையே
              இதற்குமேயி ணங்கினளே ரோதியாளுமே யேற்றதொரு காற்றெனவே சேர்ந்தனளையோ
              இதமொடேய னுப்பினனே சேவகரையே யேவலேபோற் செய்துகைதி ஸ்நானகனையே
              பதனமுமே செய்தனரே மக்கிரவெனும் பட்டணத்துக் கோட்டைசிறைச் சாலையினிலே.