பக்கம் எண் :

52திரு அவதாரம்

 

57.        ஏரோதி யாள்ஜானைச் செய்யவேகொலை எத்தனையோ சூழ்ச்சிகளே செய்திடினுமே
              ஏரோதா மவ்வரசன் செய்யவேயிதைச் சற்றுமிணங் காதிருந்தான் தன்பயத்தினால்
              சீராய்ம தித்தனர்ஜ னங்களேயெலாம் இன்னவனோர் தீர்க்கனான தர்சியெனவே
              ஏரோத றிந்தனனே தூயனெனவும் எண்ணினனே நீதிபர னேயெனவுமே.

58.        பயந்ததினால் மன்னனேரோ தென்பவனுமே பாதுகாத்து வந்தனனே ஸ்நானகனையே
              நயமிகவே நல்லவாமா லோசனைகளே நாடியேகேட் டவ்விதமே செய்துவந்தனன்
              வியந்தவனே யன்னவனின் வார்த்தைகளையே மிக்கவே விருப்பொடுமே கேட்டுவந்தனன்
              நயமிகவே கேட்டவையே செய்துவரினும் தீங்கிதையே நீக்கமன மற்றனனையோ.

59.        பலதினங்க ளச்சிறையி லேயிருந்தவன் பலவிதமாங் கஷ்டமேய டைந்தனனையோ
              சிலதினங்கள் சீடரையே தேற்றயேயவர் திடமிகவ டைந்துகொள வேமுயன்றனன்
              நலமொடுமே ஜேசுவைக்கண் டேயவரையே விசுவசிக்கச் செய்யவுமுயற்சி செய்தனன்
              பலதினமே சென்றிடினுந் தீர்க்கவேபகை தருணமுமே பார்த்தனளே ரோதியாளுமே.

24. ஸ்நானகனின் சிஷியர் கிறிஸ்துவைத் சந்தித்தல்.

மத். 11:2 - 19; லூக். 7 : 18 - 35.       

வேறு

60.        பார்த்திபன் புகழே பரவவே யெவனும் அருளனின் சிஷியருமே மறிந்தார்
              ஆத்திர மொடுமே யணுகினர் சிறையி லிருந்தனா மருளனி னிடமே
              நேர்த்தியா யவனுக் குரைத்தனர் விஷயம் விமலனின் புகழ்ச்சியை விரிவாய்
              ஆத்திர மிகவே யனுப்பின ரிருவர் சிஷியரை யருட்குரு விடமே.