27. "உம்வாழ்த்தல் சப்தமே என்செவியி லோடியேவந் தேறவுமே என்வயிற்றின் அம்பால னானவனுங் கேட்டதையே யானந்த மாயவனுந் துள்ளினனே அம்மாநீர் பாக்யவதி விஸ்வசித்தீர் அத்தனுரை யாவுநிறை வேறு" மென்றார் இம்மங்கை இம்மொழியே கேட்கவுமே ஏசுபர னைத்துதித்தே பாடினரே. 5. கன்னிமரியம்மனின் கீதம். லூக். 1: 46 - 56. 28. நித்தமுமே என்துதிக்குப் பாத்திரராய் நித்தியராய் நிற்பவராங் கர்த்தருக்கே அத்தனருள் பெற்றஎனி னாத்துமமே எத்தினமும் மாமகிமை யேறெடுக்கும் நித்தமுமே தூதகணம் போற்றுகிற நிர்மலனாம் ரட்சகனை சர்வஞ்ஞனை நித்தமுமென் னாவியுமா னந்தமுமே கொண்டுகளித் தேமிகத்து திக்குமே! மெய். 29. இத்தரையி லேமிகுந்த தாழ்ச்சியுறு ஏழையாங் குடும்பமதின் ஏழையான் அத்தனுமே தம்மடியாள் தாழ்ச்சியறிந் தேயுன்னத அன்பினாலு யர்த்தினரே இத்தனைமா க்ரூபைகளு முற்றஎனின் வாழ்வினையே பார்க்குமாமெச் சந்ததியும் இத்தனைமா ஸ்ரேஷ்டவருள் பெற்றஎனை மாபாக்ய வாட்டியென வாழ்த்துவாரே! 30. ஆதிபரன் வல்லவரே கர்த்தரவர் அதிமகிமை யான்பெறவே செய்தனரே ஆதிமுதல் மாகனத்துக் கானதொரு அவர்திருநா மம்பரிசுத் தம்முளதே ஆதிமுதற் கொண்டதொரு மாவிரக்கம் பயமொடவர் பாதமேப ணிந்தவர்க்கே ஆதிமுதல் வம்சவழி வம்சமாயே அநந்தசதா காலமும்நி லைத்ததுவே. 31. அன்பரவர் மாபலத்த தம்புயத்தால் அதிவலிய க்ரீயைகளைச் செய்தனரே அன்பிலராய்த் தம்மிதய சிந்தைகளில் அகந்தையுளர் தாஞ்சிதறச் செய்தனரே வம்புளவாங் கீர்த்தியஞ்செய் வீரரையே வகித்ததொரு ஆசனம்நின் றேயிருக்கி அன்புளராய் உள்ளமதிற் றாழ்மையுளோர் அதியுனத மாம்பதவிக் கேற்றினரே. 33. அரும்பசியே யுற்றவரா மேழையருக் கருணலங்க ளீய்ந்துபசி யாற்றியுமே வறுமையொடு தாழ்ச்சியுமே போக்கியவர் மகிமையொடு வாழ்வுயவு யர்த்தினரே தருமகுண மற்றவரா மைஸ்வரியர் தமக்குளவாம் யாவுமேயி ழந்தவராய் வறுமையடைந் தேழையராய்க் கஸ்தியுற மனம்வெதும்பி வாடவுமே வைத்தனரே. |