33. "நம்முடைய முன்னவர்பி தாக்களுக்கே நமதுபரன் சொல்லியதாம் வாக்கதே போல் நம்பிதாவாம் ஆபிரகாஞ் சந்ததியார் நலமொடுமென் னாட்களுமே வாழ்ந்துயவே தம்மனதிற் கொண்டதொரு முடிவேபோல் தயவொடிரக் கஞ்செயவே தாம்நினைந்தே தம்முடைய தாசனிஸ்ரா வேலையே யரவணைத்தே யாதரித்தார் மாதயவாய்". 34. இப்படியே கன்னியர்சுத் தாவியிற்றம் மாவியினி லேபரவ சம்மடைந்தே அப்பனையே தோத்திரக்கீ தங்களினால் ஆனந்தமா யேதுதித்த மர்ந்தனரே அப்புறமும் மாதங்களா யவ்விடமே அம்மையொடுங் கூடியிருந் தின்படைந்தே அப்புறந்தா னம்முதியோ ரைப்பிரிந்தே ஆங்குநின்றே தம்பதிக்கே யேகினரே. 6. திரு அவதாரன் ஜெனனம். மத். 1 : 18- 25: லூக். 2 : 1 - 7. 35. தம்பதிக்கே வந்தபினாற் கன்னியரே தமதுடநா ளண்டிவருங் காரணமாய் அம்பதியி லுள்ளவரு முற்றவரும் அவர்நிலைமை யின்னதெனக் கண்டனரே தம்பதியா யானவனோ நன்மனசான் தருமகுண முள்ளவனோ தானறிய வெம்பிமனம் நொந்திடினந் தண்ணளியால் வெகுண்வமா னஞ்செயவே எண்ணமிலான். 36. எப்படியிருக் கன்னியரே கர்ப்பமானார் எனுமர்ம மேயறிந்தோர் யாவருளர் அப்படியே யானதினா லெல்லோரும் அவரதுமேல் சம்சயமே கொள்ளுவரே அப்படியோ சேப்பனுஞ்சம் சயித்தாற்கு றையவன்மேற் கூறுதல்நி யாயமன்றே அப்படியா னாலுமந்த நீதிமானோ அவரைச்சபை யேற்றுதற்கே எண்ணமிலான். 37. அம்மனுக்கே தள்ளுதற்சீட் டெகொடுத்தே அந்தரங்க மாயகற்ற எண்ணமிட சம்மனசோர் தூதுவனே சொப்பனத்திற் றோன்றியுமே சற்குயோ சேப்பினுக்கு நன்மனசா தாவீதென் வேந்தனது நற்குமரா ஜோசபேநீ யடிப்படிச்செய் உன்மனைவி யானவரைச் சேர்ந்தருள்வாய் உன்னிடமே சேர்ப்பதற்கோ ரையமில்லை. 38. "அவரிடத்தி லற்புதமா முற்பவமோ அதிபரிசுத் தாவியரா லானதுவே அவர்தமக் கேற் பட்டதொரு காலமதில் அருணிறைந்த பாலகளைப் பெற்றெடுப்பார் அவருக்கே ஜேசுவெனு மின்பெயரே யினிதுறவே யீந்தருள்வாய் ஏனெனிலோ அவருவந்தே தஞ்ஜனம்பா வங்கணின்றே அவரைரட்சிப் பாரருளாய்" என்றனனே. |