39. எம்மானோர் தீர்க்கனாலு ரைத்ததேபோல் நிறைவுறவே யீதெலாம்ந டந்ததுவே அம்மா! ஓர் கன்னிகையே கர்ப்பமாவள் நலமருளும் பாலகனைப் பெற்றெடுப்பாள் இம்மானு வேலெனுமோர் இன்பெயரே இவர்க்கிடுவாரின்பமுற என்றனனே இம்மானு வேல்பதத்துக் கர்த்தமிதே "இருக்கிறாரே எங்கடவுள் எம்மொடுமே"! 40. அத்தணருஞ் செய்தியிதே கூறியபின் அவ்விடம்நின் றந்தரமாய் நீங்கினனே நித்திரையி னின்றெழும்பி யம்மகனோ நேர்மைமிகத் தூதனுட கட்டளைபோல் அத்தருண மேயெழும்பி யாத்திரமாய் பத்தினியா வோரவரைச் சேர்த்துமேபின் பத்திரமாய்ப் பத்தினியாங் கன்னியரைப் பண்பொடுமே கண்ணியமாய்க் காத்தனனே வேறு 41. தீதிலாம னசுள்ளோனே தேர்ந்தபக்தி யுள்ளோனாம் ஆதுலரை யாதரிக்கும் அன்புளோன கஞ்சேர்ந்த கோதிலாத மங்கையருக் குற்றநாணெ ருங்கிற்றே ஈதிவண்ண மாயிருக்க கட்டளையிட் டான்ராயன் 42. எத்தேசமோ எந்தவூரார் எவ்விடமோ வாழ்ந்தாலும் அத்தேசமா மந்தவூரார் ஆரூமேதம் மூர்சேர்ந்தே எத்தேசஜ னக்கணக்கை யேற்றதோர்கா லந்தன்னில் உத்தரவிட் டானிராயன் உண்மையாயே மூதத்தான் 43. இக்கட்டளை யேபிறக்க எங்குமுள்ளளோர் எவ்வூரார் அக்கட்டளை போல்நடந்தார் ஆத்திரமாய் யாபேரும் அக்கமயல் சென்றவரே அந்யநாட்டுள் யூதர்கள் அக்கணமே சென்று சேர்ந்தார் ஆவலாயே தம்மூரே. 44. தாவீதுட வம்சத்தான் தச்சனாம் யோ சேப்பென்போன் மாவீரனாம் தாவிதுட வம்சமேரி யம்மன்தாம் தாவீதுபி றந்ததாந்தம் பூர்வீகமா மூரேதான் தாவீதினூ ரென்பெயர்கொள் தம்பெத்தலை சேர்ந்தாரே. |