68. உமக்குமுன் செலவே யெனதுதூ தனையே உவப்பொடு மனுப்புவேன் நலமாய் உமக்குமுன் செலுவான் உமதுட வழியே தயார்ப்படுத் துவனிவன் எனவே இவனிலும் பெரிய தரிசியே யெவனும் இவற்குமுன் பிறந்தது மிலையே எவன்மிகச் சிறியன் பரமராஜ் ஜியத்தில் இவனிலும் பெரியவ னவனே. 69. திருமன துளனா மருளளென் பவனின் நாள்முத லிதுதின மளவும் பரமராஜ் ஜியத்தி னுட்செல விரும்பித் தாக்கினார் பலமாய் பலபேர் பரமராஜ் ஜியத்தைப் பிடித்தடை கிறரே தாக்குகின் றவர்களே பலபேர் நரருளே யெவரு மலட்சியஞ் செயிலோ நன்றதைப் பிடிப்பது முளதோ. 70. உரைத்தது முளதே யருளனாள் வரைக்கும் ஓர்பிர மாணமே தெளிவாய் உரைத்தது முளதே யிதுதினம் வரைக்கும் ஓர்மையுள் தீர்க்கரெல் லவரும் உரைக்கிறேன் வருமோர் எலைஜா இவனே ஏற்கவே மனமுமக் கிருந்தால் உரைக்கிறே னுவந்தே செவிகொளக் கடவன் கேட்டுணர் செவியுளோ னெவனோ. 71. "அவனுட உபதே சங்கேட் டவருள் ஆயமே கொள்பவர் பிறரும் அவனிட மடைந்தோர் தீக்ஷையே யறிக்கை செயப்பரன் நீதிபர் எனவே அவனுட தீக்ஷை யடையசாஸ் திரியர் பரிசயர் விருப்பமற் றனரே அவமுமாக் சினரே தெய்வயோ சனையைக் கேடுமே யடைந்தன ரவரே" 72. இந்தவி தமுமே கெட்டவரி கழ்ந்தே யிடறியே போனரைக் குறித்தே இந்தஜா தியரொப் பானவ ரெவர்க்கோ எவர்க்கொப் பிடுவே னிவரை சந்தையில் வெளியே சச்சர விடுவோர் சிறுவருக் கொத்தவ ரிவரே சந்தையி லிருந்தே தஞ்சிநே கரையே குறைசொலு மொருவரை யொருவர். 73. குழலூ தினேமே யுங்களுக் கெனவே யெமதொடு கூத்தா டவிலை அழவிலை நுமரே யுங்களுக் கெனவே யழுதுமே புலம்பினோம் எனவே நலமிலாக் குறையே நவில்கிற சிறுவர் பிறர்நகைக் கவேசொல் வதுபோல் நலமிலாக் கெடுத லுற்றசந் ததியோ கெடுதல டையநடக் கிறரே. 74. தீரனா மருளன் அப்பமே புசியான் த்ராக்ஷைர சமதுவும் பருகான் வீரனா மவனை வீணிலே பழித்திர் ப்சாசுகொண் டவனென் கிறீரே மரணஞ் ஜெயித்தே மானுடர் புரக்க இங்குவந் தவர்மனு மகனை நேரமே புசித்தே பானமே பருகும் நேசரை யவமதித் திகழ்ந்தீர். |