பக்கம் எண் :

திரு அவதாரம்55

 

75.        போசனப் பிரியன் பானமே பிரியன் புத்தியி லனேனவு மகிழ்ந்தீர்
              நீசமா பவியர் ஆயமே கொளுவோர் நேசனே எனச்சொலி யிகழ்ந்தீர்
              பாசமே யகன்றே வாடியே விழுமோ வரன்புகழ் ஞானமோ அதனின்
              நேசமக் களேதாம் ஒப்புவார் நிசமே ஞானமே நீதியுள் ளதென.

76.        வானிருந் திறங்கி வான்நலம் மிகவும் வளமிகக் கொணர்ந்துவந் தவராம்
              ஞானவார்த் தையெனும் நாமமே யுளரே நாதனே ஜேசுவாம் பரனே
              ஞானமற் றவராம் நன்மன மிலதோர் நஞ்சகங் கொண்டரா மிவரை
              ஞானமா யுணர்த்த நல்லபோ தனையாங் கண்டிதப் போதகம் நவின்றார்.

77.        திரும்பிவந் தவரா மருளனின் சிஷியர் சிறையினிற் புகுந்தரு ளனுக்கே
              திருப்பர னுறைத்த திடவுரை யனைத்தும் சிறந்தஅற் புதங்களா மனைத்தும
              அருளனின் மனமே யத்திடங் கொளவே அவாவொடு முரைத்தனர் விரிவாய்
              வருமவ ரிவர்தா மெனமன மகிழ்ந்தான் மனத்திட மொடுசிறை கழித்தான்.

25. ஸ்நானகனின் முடிவு.மத். 14 : 6 - 12; மாற். 6 : 2 - 29.

வேறு

78.        தருணமுமே வாய்த்ததுவே தீயவட்குமே தவறியுமே சென்றுவிடா தோர்சமையமே
              கருணையேய லாதெதுவுந் தீங்கெணாதவன் கடினமாகக் கண்டனமே செய்வனாமவன்
              மரணமேய டைந்துவிட வன்கொடுங்கொலை வகையொடுமு டித்தனளே வன்மியவளே
              தருணமுமே வாய்த்தவட் கோர் சமையமே தலைவனாமெ ரோதினது ஜென்மதினமே.

79.        பிறந்ததாமோர் தினமுமேபி றந்ததேமிகப் பெருமிதச்சி றப்பொடுமே வாய்ந்ததேயதே
              பெரியதொரு விருந்துமேசெய் தானெரோதுவே பிரபலிய மானரைய ழைத்தனனவன்
              பிரபுகளே தளபதிக ளேயவனுட பெரியவரே வந்தனர்வி ருந்ததற்குமே
              வரவுமேகொண் டானரசன் அன்னவருமே விமரிசையே செய்தனரே வாத்தியமொடே.