80. சாந்தமாய்ச்சு கித்தனர்வி ருந்தருந்தியே அதிமிகுசல் லாபமொடும் மாகளிப்பொடும் வந்தவர்வி ருந்தினர்ம னம்மகிழ்ந்தனர் வளமிகவே த்ராக்ஷைரசந் தாம்பருகியே வந்தனளே யிப்பொழுதே ரோதியாளுட மகளொருவி சாலமியென் னாமமுடையாள் தந்தனளே யங்குளோர்க்கே மாகளிப்புமே மயக்கினளே தன்னுடைய நாட்டியமதால். 81. அதிபனாமே ரோதுவெனு மம்மனுடனே யடைந்தனனா னந்தமுமே நாட்டியமதால் அதிதிகளா யங்குகூடி வந்திருந்தவர் அடைந்தனரா னந்தமுமே நாட்டியமதால் அதிபனாமே ரோதவன்ம யங்கினவனாய் மதுரசமாம் பானமதால் நாட்டியமதால் எதிரிலேய ழைத்தனனே யவ்வணங்கையே "உனக்கெதுவோ வேண்டியதைச் சொல்க" வென்றனன். 82. எதுவெனினுங் கேட்கிறதை நீயடைகுவாய் என்னுடைய ராஜியத்திற் பாதியெனினும் அதனையேநீ கேட்டிடினும் யானருளுவேன் ஆணையிது நிச்சயமே யென்றுரைத்தான் அதுசெவியுற் றக்கணமே யவ்வணங்குமே அவ்விடம்நின் றேயகன்றார் யாத்திரையாய் "எதுகேட்கச் சொல்லுகிறா யன்னவரிடம்" என்றுரைக்கத் தாயெரோதி யாளிடத்தே. 83. மனமகிழ்வ டைந்தனளே ரோதியாளுமே மனமதேபோ லேநிகழ்ந்த தென்றறிந்துமே கனமிகவா மோர்பொருளை யேகேட்கவே கடிதினிலே யேவினளே யவ்வணங்கையே இனமொடுமே சிறையிலுள்யோ வான்சிரசை யெனக்கருள்வீ ரப்பொருளே போதுமெனக்கே எனதுடைய கணவனிடம் வேண்டுவா யென அவசரமா யேயனுப்ப இவ்வணங்கையே. |