84. வந்தனளே ரோதிடமே சாலமியுமே வணங்கியவள் வேண்டினளே பவ்வியமொடே "என்தனுக்கே யீய்ந்தருள்வீ ரித்தருணமே யருளனுட சிரசையொரு தாலமதிலே நைந்தனனே ரோதிதனைக் கேட்டவுடனே மனமடிந்தும் பயனெதுவுந் தோன்றியதிலை நைந்துமனச் சாட்சியையே தள்ளிவிட்டனன் மயங்கினனே தன்னுடைய ஆணைமீறவே. 85. பார்த்தனனே பந்தியில மர்ந்தவரையே பயந்தனனே ஆணையதை மீறிவிடவே பார்த்தனனே நின்றவொரு சேவகனையே பணித்தனனே சீக்கிரமா யேசெலுவையே "சேர்ந்துசிறைச் சாலையிலே ஜானவனுட சிரமதனைச் சேதமேசெய் ஜல்தியினிலே சேர்த்துவிடு பெண்மணியி வள்கரமதில் சிரமதனை வைத்துமேயோர் தாலமதிலே" 86. அடுத்தனனே யங்குசிறைச் சாலையையுமே அரிந்தனனே ஸ்நானகனின் சிரமதனையே எடுத்தனனே யஃதையொரு தாலமதிலே மினமொடுமே சேர்த்தனனே யதையணங்கிடம் கொடுத்தனனே சாலமியு மச்சிரசையே கொடியவளாந் தாயினது கரமதனிலே அடுத்தனரே ஸ்நானகனின் சீடருடலை அடக்கியேயு ரைத்தனரே அருட்குருவிடம். 26. யோர்தான்தீரம், சமாரிய ஊழியம்.யோ. 4 : 1 - 3. வேறு 87. முன்வரும் முன்தூ தன்தான் முடித்துமே தன்னூழ் யத்தை மன்னனா மேரோ தாலே சிறைவச மானான் பின்னர் முன்னவன் பின்வந் தோரே முயற்சியாய்த் தம்மூழ் யத்தை இன்னுமே செய்தே வந்தார் எவனுமே ஜார்டன் தீரம். |