95. யேசுத னித்தா ரங்கே இவருட சீடர் நீங்கி போசனங் கொள்தற் காயே புகுந்திருந் தாரே யூர்க்குள் பேசவே யன்னோ ரோடே பிறரவண் யாரும் இல்லை யேசுவோ காத்தே யங்கே யிருந்தரோர் மாதே நோக்கி. 96. அந்தவோர் நேரம் ஆறாம் மணியதே வேளை யாகும் இந்தவோர் உஷ்ணவேளை எவர்வரு வாரோ அங்கே வந்தன ளங்கோர் மாதே ஜலமுமே மொண்டே போக வந்தச மார்யா மாதே கொண்டுவந் தாளோர் தோண்டி. 97. ஏகமா யிருந்தோ ரங்கே இவளொடு சம்பா ஷித்தார் தாகமா னேனே யீதோ தருவையே தாகத் துக்கே தாகமே யானோ தீர்க்கச் சமாரிய மாதே யன்றோ தாகமு மக்கே தீர்க்கத் தகுதியே நீரோர் யூதன். 98. அறிந்திலை தெய்வ ஈவே உனதிடம் ஆவ லாயே தருவைதா கத்துக் கென்றே ஜலமுமே கேட்கின் றோரை அறிந்திருந் தாலோ நீயே அவரிடங் கேட்பா யன்றோ அரியதாஞ் ஜீவ நீரே அளித்திருப் பாரே மெய்யே. 99. ஆண்டவா மொள்வ தற்கே பாத்திரம் யாதும் இன்றே ஈண்டிதோ யாழக் கேணி எவ்விதம் ஆமோ உம்மால் வேண்டினா லீவே னென்றீர் மிக்கநல் ஜீவ நீரே ஆண்டவா எங்கே நின்றோ ஆகுமிஜ் ஜீவ நீரே 100. இந்தநற் கேணி தானே எங்களுக் கேமுன் னாலே தந்தவ ராம்நம் தந்தை யாக்கைபைப் பார்க்கில் நீவிர் எந்தவி தம்மே லோரோ ஈதினிற் றாகந் தீர்த்தார் தந்தையர் மக்கள் தாமும் சர்வஜெந் தாரும் மாகும். 101. தண்ணீர் நற்றண் ணீர்தான் தாகமே தீரா திந்தத் தண்ணீர் குடிப்போ னுக்கே தாகமுண் டாகும் மேலும் தண்ணீர் ருளதே தாகம் போக்குமே யானே யீயும் தண்ணீர் குடிப்போ னுக்கே தாகமுண் டாகா தென்றும். |