20. விருப்பொடு மவர்க்கே விரித்துரைத் தனரே உண்மையே யுரைக்கிறே னுமக்கே திருப்பிதா செயுமா மெதையுமே சுதனே பார்த்துமே செய்வதே யலதே பிறிதெதுஞ் சுயமாய்த் திருச்சுத னவரே செய்வதில் இணக்கமாய் அறிமின் திருப்பிதா செயுமா மெவைகளோ அவற்றைச் செய்குவர் திருச்சுத னதுபோல். 21. திருப்பிதா தமது திருச்சுத னிடத்தே திவ்யபே ரன்புவைத் தவராய் திருத்தமா யவர்தாம் நடத்துவ வனைத்தும் திட்டமாய்க் காட்டுவ ரிவர்க்கே பெரியவை யிவற்றிற் காட்டுவா ரிவர்க்கே நீவிராச் சரியமே கொளவே மரித்தவர் களையே யெழுப்புகின் றதுபோல் மரணநின் றெழுப்புவார் சுதனே. 22. எவருமே பிதாவைக் கனஞ்செய் வதுபோல் எவருமே கனஞ்செயச் சுதனை எவர்க்குமே செயுமாந் தீர்ப்புமே யனைத்தும் எழில்பிதா தாஞ்செய் வதில்லை அவரவர்க் குரிய தீர்ப்புமே யனைத்தும் இடுமதி காரமா மனைத்தும் எவர்க்குமே லவராம் மைந்தனா மிவர்க்கே யளித்திருக் கின்றனர் பரனே. 23. திருச்சுதன் தமையே கனஞ்செயா தவனோ திவ்யமைந் தனையனுப் பினராம் திருப்பிதா தமையே கனஞ்செயா தவனாம் தீயவ னாயினான் நிசமே திருச்சுத னெனது திருவுரை செவிகொண் டென்னையிவ் வுலகனுப் பினராம் திருப்பிதா தமையே விசுவசிப் பவனோ நித்திய ஜீவனுள் ளவனே. 24. உட்படா னிவனோ ஆக்கினை யதனுள் அகல்வனே மரணநின் றுடனே உட்படு கிறானே நித்யஜீ வனுளே யுரைக்கிறே னிதுநிசம் நிசமே இப்படி விஷய மானதின் பொருட்டே யெனதுவே சனமதற் கிசைந்தே உட்படு முடனே நித்யஜீ வனுக்குள் உயிர்விசு வசமுள் ளவராய். 25. சென்றுபோ னவருந் திருமகன் தொனியே செவியுறும் நாள்வரு கிறதே நன்றிது தினமே அதுவந் ததேமெய் நலமுறு மேற்றபோ திதுவே என்றுமத் தொனியே யெவர்செவி யுறுமோ அவருயிர்த் தெழுவரே நிசமாய் என்றியா னுமக்கே யதிநிச நிசமாய் இசைக்கிறேன் கொளுமிதை யுடனே. |