பக்கம் எண் :

திரு அவதாரம்67

 

26.         திருப்பிதா அவரே தம்மிலே தமக்குள் ஜீவனு ளராயிருப் பதேபோல்
              திருச்சுத னவருந் தம்மிலே தமக்குள் ஜீவனு ளாராயிருப் பதற்கே
              அருட்பிதா அவரே யருளின ரவர்க்கே மனுமக னானதா லவரே
              அருளின ரவர்க்கே தீர்ப்பிடு கிறதாம் உனதமா மதிகா ரமெலாம்.

27.         பிரமியா திருமின் நீரிதைக் குறித்தே பிரேதக் குழிகளி லிருப்போர்
              திரமிகு மவரின் சப்தமே செவிகொள் தருணமுந் திட்டமாய் வருமே
              புறப்படு வரலோ நன்மைசெய் தவரோ புனிதமாஞ் ஜீவனே யடைய
              புறப்படு வரலோ தீமைசெய் தவரோ கொடியபொல் லாக்கினை யடைய

28.         செய்கிற தெதுவும் யானெனின் சுயமாய்ச் செய்கிற திலையெது பொழுதும்
              செய்தீர்ப் பெதுவும் எப்பொழு துமேயான் கேட்கிற படிசெய் கிறேனே
              செய்வது மிலையான் என்மனப் படியே யெனையனுப் பினர் மன மதேபோல்
              செய்யவே விரும்பித் தேடுவ ததனால் நீதியுள தென்தீர்ப் பதுவே

29.         சாட்சியே கொடுத்தால் யானெனைக் குறித்தே சாட்சியோ சத்திய மலவே
              சாட்சியே யிலதா யென்தனைக் குறித்தே சாட்சியே கொடுப்பவ ருளரே
              சாட்சியே கொடுப்போர் சாட்சிய மதுவோ சத்திய மெனவறிந் துளேனே
              சாட்சியே கொடுத்தான் சத்திய மதற்கே ஜானைநீர் வினவிய பொழுதே.

30.         ஒப்புகி றதற்கே யுகந்தசாட்சி யுமே உலகமாந் தருடைய தலவே
              செப்புகின் றனன்யான் திடமொடு மிவற்றை யடையவே மீட்பை நீவிரும்
              எப்பொழு துமேஜான் திடமிக ஒளிரும் எரிவிளக் காயிருந் தனனே
              தப்பிலை யவனின் ஒளியது தனிலே களிக்கம னமாயினீர் சிலகால்.

31.         மெய்ச்சிறப் புளதாஞ் சாட்சியுண் டெனக்கே ஜானுடன் சாட்சியிற் சிறந்த
              செய்யவே யெனக்குப் பிதாவுரைத் தவையாம் சிறப்புற நடத்துதி றவையாம்
              மெய்க்கிரி யைகள்மெய்ச் சாட்சியே தருமே யெனையனுப் பினர்பிதா வெனவே
              ஐயனே அவர்தாம் இங்கனுப் பினரென் றெனைக்குறித் தருளின துளதே.

32.         ஒருபொழு தெனினு மவர்தொனி யினிதாய் உமதுசெ விகேட்டதே யிலையே
              ஒருபொழு தெனினு மவருரு வெதுவென் றுமதுவி ழிகண்டது மிலையே
              ஒருபிதா வனுப்பும் ஒருவரி னிடத்தில் உயிர்விசு வசமிலா ததனால்
              ஒருபொது முமக்குள் தரிப்பது மிலையே அவரது உயிருள வசனம்.