31. நாசரேத் புறக்கணித்தல். மத். 4 : 13; லூக். 4 : 16 - 30. 39. திருஎரு சலையிற் சிலதினங் கழித்தே திரும்பினர் கலிலிநாட் டினுக்கே அருட்குரு பரனா ரடைந்தனர் நசரேத் தமதுட வளர்ந்தவோர் பதியே திருத்தினத் தினிலே தமதுவ ழமைபோல் ஜெபாலய மதனுளே புகுந்தே திருச்சுரு ளினிலே திருமறை வசனம் படிக்கவே யெழுந்துநின் றனரே. 40. பரன்குரு கரத்திற் பண்பொடு கொடுத்தார் தரிசியே சயாவா கமமே விரித்தன ரெடுத்தே யம்மறைச் சுருளை விரிந்ததா மிடமோ இதுவே தரித்திருக் கிறரென் மேல்நல மருளாய்த் தயைநிறை பரனினா வியரே தரித்திரர் தமக்கே நற்செய் திசொல தந்தன ரபிஷக மெனக்கே. 41. அகம்நொறுங் கினரைக் குணமாக் கவுமே அந்தகர்க் கவசிய விழியே அகச்சிறை களுக்கே அகவிடு தலையே கூறிய றிவிக்கவு மருளாய் மிகநொறுங் கினரை விடுதலை செயவும் கர்த்தரி னனுக்கிரக ஆண்டை அகமகிழ் வொடுமே பிரபலஞ் செயவும் என்னையே யனுப்பின ரருளாய். 42. இப்படி வரைந்த பாகமா மதனை படித்திது சுருளையே சுருட்டி அப்புறம் மறையின் பாகமா மதனைப் பணிவிடை யாளிடங் கொடுத்தே அப்புறம் பொருளை யங்குளோர்க் குணர்த்த அமர்ந்தன ரவணா சனத்தில் அப்பொழு தவணுள் யாவரின் நயனம் அவரை நோக்கியே யிருக்க. 43. எம்பர னவர்க்கே இவ்வுரை களைக்கொண் டிதவுப தேசமே பகர்ந்தார் அம்மறை வசனம் அந்தமாய்ச் சொலுமாம் அருள்மிக ஊழிய மனைத்தும் தம்மைக் குறித்தே தம்மிலே முடிந்த தெனுங்கடை வாக்கொடும் முடித்தார் இம்மறை வசனம் இத்தினம் நிறைவே றினதுஞ் செவிகேட் கவுமே. 44. அங்குளோ ரவர தருளுறு மொழியை யருமையாய்ச் செவியுற மகிழ்ந்தே அவரருள் மொழியின் திறமுமெவ் வளவோ எனஅவர் கொடுத்து சாட்சியுமே "எவனிருந் திவற்குச் சிறந்தஞா னமிதே யிறங்கின" தெனவதி சயித்தார் "இவனிதே பதியான் ஜோசபின் மகனே" எனவிகழ்ந் திடறின ரிவரே. |