45. உன்னதக் குருவோ உரைத்தன ரவர்க்கே உணர்வடைந் துய்யவே யவரே என்னிட மிதுபோ திதுவித முரைப்பீர் எனச்சொலின் நிசமே மருத்துவா உன்னை யுனைநீ யுறுசுகஞ் செய்வாய் எனும்பழ மொழிதனைச் சொலியே உன்தனாற் கபர்நா கூமிலே நிகழ்ந்த உயர்க் ரியை களையா மறிந்தோம். 46. உன்னுட பதியா மூரிதே யிவணே செய்குவை யுவப்பொடென் றுரைப்பீர் தன்னுட பதியிற் றரிசியா மெவனும் சத்யம் கண்யம டைவதில் என்னசெய் திடினு மூருளோ ரவனை யங்கிக ரிப்பதே யிலையே சொன்னது நிசமே கேண்மினிப் பொழுதே சொல்கிறே னவற்றை நுமக்கே. 47. எலிசாத் தினத்தில் வருடமூன் றரையாய் வானமே யடைத்தே யிருக்க மெலிந்ததத் திசையே கொடியபஞ் சமதால் மழையிலா வெறும்வெயி லதனால் மலிந்திருந் தனரே மணமக ரிழந்த மனைவியரிஸரவே லருளே நலிந்தவ ரிவருள் ளெவரிட மெனினும் நலமுற அனுப்பப் படவிலை. 48. சீரபெ னிகேயென் சீதனாட் டினிலே சேர்ந்ததோர் சரேப்தாப் பதியில் சீரொடு பொருளோ சற்றுமே யிலதோர் ஏழையி னிடஞ்சென் றனனே சீரிய ளெலிசாத் தீர்க்கனாட் களிலே சீரிஸ ரேலராஞ் ஜனத்துள் சீரிலா தவராங் குட்டரோ கிகளுள் சீர்அக மடைந்தவ ருளரோ. 49. "சீரியா தனிலே சிறப்புள மனுடன் அதிபனா கமான்தள பதியே ஆரிய னெலிசாத் திரிசியை யடைந்தே யருஞ்சுக மடைந்தன னருவாய் ஏறிய குலமென் றேற்றமாய் மதிக்கும் இஸரவேல் ஜனத்திலுள் ளவரோ ஆரிய னெவனோ அவன்தம தெனிலோ அடைவதில் நலம்பெற அவனால்." 50. குருபர னிவையே கூறஅங் கிருந்தோர் எழுந்தனர் கொடுஞ்சின மடைந்தே அருட்குரு பரனை யாலய மிருந்தே யகற்றினர் மிகஅவ சரமாய் தெருவழி தனிலே தீவிர மொடுமே சென்றுதள் ளினரூர் வெளியே குரூரக் கொடியோர் தீயவ ரவரைக் கொடுங்கொலை புரியவே முயன்றார். 51. அந்தவூ ரமைந்த அருகுறு மலையாம் அரியசெங் குத்தா மலைமேல் சொந்தமா மவரை அதிலிருந் துருட்ட சுறுசுறுப் பொடுகொணர்ந் தனரே அந்தசந் தடியில் அவர்நடு விருந்தே யகன்றனர் மறைந்தே பரனே விந்தை யீதறிந் வியந்துமே கொடியர் திரும்பினர் விரைந்துதம் மகமே. |