32. கப்பர் நாகூம். மத். 4 : 12 - 17; லூக். 4 : 31, 32. வேறு 52. தலைதடு மாறிப் போயே தஞ்சுய வூரைச் சேர்ந்த தலைவனா மன்பர் தம்மைத் தள்ளவே போனோ ராகும் கொலைஞராம் நசரேத் மாந்தர் கொற்றவன் தம்மைத் தள்ளி தலையினால் வந்த சீரை தாளா லுதைத்தா ரந்தோ. 53. வெண்டியே கொணர்ந்தா ரிங்கே விதவித நன்மை கள்தாம் வேண்டிய திலையென் றேவெறு மையாய்ப் போனா ரந்தோ தாண்டியே யகன்றே போச்சே தன்யநிறை நன்மை யாவும் ஆண்டவ ரொடுமே சென்றே யடைந்ததே கப்பர் நாகூம். 54. கடற்கரை யருகே யுற்ற அம்பதி கப்பர் நாகூம் இடங்கொடுத் தவரை யேற்றே யேற்றமே யதுபெற் றோங்க நடத்தினர் நலமா மூழ்யம் நண்பொடு மிருந்தே யங்கே தடம்விரி கலீலி நாட்டில் தாண்டியத் திசையுந் தானே. 55. போதகம் புரிந்தா ரங்கே புண்ணிய புனித போதம் சேதியோ சுவிசே டந்தான் பரமராஜ் யத்தின் சேதி வேதனைப் படுவோர் நோயால் பலர்சுகம் பெற்றார் வந்தே பேதமின் றெவரும் வந்தார் பெருநலம் பெற்றே போனார். 56. வீட்டினிற் போதித் தாரே நெடுந்தெரு போதித் தாரே நாட்டினிற் போதித் தாரே நகரிலே போதித் தாரே காட்டினிற் போதித் தாரே கடற்கரை போதித் தாரே கூட்டமோ போதித் தாரே குறைந்தபேர் போதித் தாரே. 57. அவரது வாக்கைக் கேட்டோர் அதிசயித் தனரே மிக்க அவரது வாக்கோ யாவும் அதிகன முளதே யஃதால் எவர்பிறர் போதித் தாலும் இவர்பிறர் வசனஞ் சொல்வார் இவர்போ தகமோ யாவும் இணையிலாச் சுயமே தானே. 58. கடற்கரை யருகே தானே நதிக்கரை யோரந் தன்னில் கடங்கொழுஞ் செபுலோன் நாடும் இனமொடு நப்தல் லீயும் அடங்கிய கலீலி யாவும் புறஜன அந்யர் நாட்டில் படர்ந்ததாம் இருளில் உள்ளோர் பெரியதோர் ஒளிபார்த் தாரே. |