பக்கம் எண் :

72திரு அவதாரம்

 

59.        "மரணமா மிருட்பா கத்தில் வசித்தராம் மாந்தர் கட்கே
              தருணமே தோன்றிற் றன்றோ உயிரருள் ஜோதி" யென்றே
              தரமுனோர் தினஞ்சொன் னானே தரிசியாம் ஏசா யாவே
              திரமுள வசனந் தானே திடமொடே நிறைவே றிற்றே.

33. கடற்கரைப் பிரசங்கம், திரள்மீன் பிடித்தல், நால்வர்
பின் தொடர்தல்

மத். 4 : 18 - 22; மாற். 1 : 16 - 30; லூக். 5 : 1 - 7.

வேறு

60.         குருவொரு தினமே கடற்கரை வரவே குழுமினர் திரள்ஜன மவணே
              அருட்போ தனையே செவியுற விரும்பி அவரிடம் நெருங்கிவந் தனரே
              அருகுறும் இரண்டு படவிலொன் றமர்ந்தே சிறிதுதள் ளவேசொலி யிருந்தே
              அருளொடு மவர்க்கேப கர்ந்தனர் வசனம் அவரதே படவினி லமர்ந்தே

61.        திருக்குரு தமக்கே யுதவிய படவோ சீடனாஞ் சிமியன் படவே
              திருவருள் வசனம் முடித்துமே கரையிற் சேர்ந்தபின் திருக்குரு பரனே
              அருளொடு சிமியன் சிஷியனை யழைத்தே "தள்ளுவீர் படவை யழத்தில்
              விருப்பொடு முமது வலைகளை விசிறி மீன்பிடிப் பீ"ரென உரைத்தார்.

62.        "ஐயரே கடந்த நள்ளிரா முழுதும் அரும்பிர யாசமே யெடுத்தும்
              மெய்யெமின் பிரயா சங்களே யனைத்தும் பயனிலை மீனெது மிலையே
              மெய்யிதே பொழுதும் வாக்கை நம்பியே விசுறுகி றேனென் றனனே
              மெய்யதே வலைகள் பீறுமாம் விதமாய் மிகுதியா மீன்களே பிடித்தார்.

63.        இருசகோ தரரும் மீனுள வலையை யிழுக்கவே லாததை யறிந்தே
              மறுபட வினிலுள தோழரா னவர்க்கே சைகை செய்தனர் உதவ
              இருசகோ தரரும் வந்துதம் படவில் உதவினா ரிச்சகோ தரர்க்கே
              இருபட வுகளும் ஆழ்ந்துவி டுமென நிறைத்தனர் மீன்களாற் படவை.

64.        கண்டுமே சிமியன் அதிசய மிதனை கணமிகு புனிதரென் றுணர்ந்தே
              அண்டியே யவரின் இணையடி பணிந்தே அவரையே நமஸ்கரித் தனனே
              அண்டையில் வரவே தகுந்தவ னலேனே அசுத்தபா வியேயா னடியேன்
              அண்டையி லணுகா தடியனை விலகி அகலுவீர் எனவிறைஞ் சினனே.