பக்கம் எண் :

திரு அவதாரம்73

 

65.        அப்படி யுரைத்தான் அதிசய மிதுகண் டதிபிர மித்தன ரதனால்
              அப்படி யடுத்த இருசகோ தரரும் அதிபிர மித்தனரிதனால்
              அப்பனே யுரைத்தார் சிமியனை விளித்தே சிமியனே அஞ்சவேண் டியதிலை
              இப்பொழு துனையான் இதமொடாக் குவேனே மனுடரைப் பிடிக்கிற வனுமாய்.

66.        "இருசகோ தரரே சிமியனந் துருவே எனைப்பின் பற்று" மென்றனரே
              இருவரு மிணங்கி வலைபட வனைத்தும் விட்டுமே யேசுபின் சென்றார்
              குருபர னடுத்த இருசகோ தரரும் கூடியே பின்வர அழைத்தார்
              திருவுரைப் படிபின் தொடர்ந்து சென்றனரே தந்தை படவெலாம் விடுத்தே.

34. கப்பர்நாகூம், ஓய்வுநாளூழியம், பிசாசு பிடித்தவன், சீமோனின்

மாமி, பலபிணியர் சுகம்பெறல் மத். 8 : 14 - 17; மாற். 1 : 21 - 38;
லூக். 4 : 33 - 43

67.        அங்கிருந் ததாமோ ராலயம் புகுந்தே அருளுப தேசமே பகர்ந்தார்
              அங்கிருந் தனனோ ராவியே பிடித்தோன் அலறின னகக்ஷணம் ஐய்யோ
              இங்குமக் கெமக்கும் ஐய்யனே எனவோ நசரயா யேசுவாம் பரனே
              இங்குவந் ததுவாங் காரண மெதுவோ கெடுக்கவோ எங்களை யிவணே.

68.        "அறிந்துளே னுமையே நீவிரா ரெனவே யறிகுவேன் திருப்பர னுடைய
              பரிசுத் தரேநீர் தீயனா னவன்யான்" எனப்பத றியல றினனே
              பரிதவித் தனரே யேழை யவன்மேல் பகர்ந்தல கையை யதட்டி
              பரிந்தே யகல்வாய் பேசா தெதுமே புறப்படு இவனிட மிருந்தே.

69.        அலைசடிப் படுத்தி அலைக்கழித் தவனை அஜ்ஜனத் திரள்நடு வினிலே
              விலகின தவனைத் தரையினில் விழுத்தி வேறெதுஞ் செய்யாய்க் கெடுதி
              பலஜனத் திரள் பலத்தவிக் கிரியைப் பார்த்ததி சயமடைந் தனரே
              நலமிகும் பலத்தகிரி யையா மிதனைப் பார்த்ததில் லிதுதின மளவும்.

70.        இதுவச னமென எவ்வித மிதுவோ புதியபோ தகமே யிதுவே
              அதிகா ரமொடும் வல்லமை யொடுமே நலமிலா அலகை யிவைக்கே
              விதிக்கிறா ரவையே கீழ்ப்படி கிறதே விலகியப் புறமகல் கிறதே
              புதுமை யிதுவென் றொவ்வரு வருமே புகழ்ந்துமே யுரைத்தனர் நலமாய்