பக்கம் எண் :

திரு அவதாரம்75

 

78.        தேடிவந் தனரே வெகுஜனத் திரளே திருக்குரு விடமடைந் தவர்கள்
              "நாடிவந் தனம்யாம் நலமொடு மெமதோ டிரு" மென நிறுத்தவே முயன்றார்
              "நாடிமற் றுளவாம் பலதலங் களிலும் நலமிக நடந்துமே யெவணும்
              தேடிவந் தனன்யான் பிரபலஞ் செயவே பரமராஜ் ஜியத்தைக் குறித்தே"

35. சுற்றுப் பிரசங்கம். மத். 4 : 23 - 25; மாற். 1 : 39: லூக். 4 : 44

79.        அவ்விட மிருந்தே சென்றனர் குருவே அகல்கலி லேயநா டெவணும்
              எவ்விட மடைந்தும் ஆலயம் புகுந்தே எழிலுப தேசமே பகர்ந்தார்
              செவ்விய பரம ராஜ்யசெய் தியையே பகர்ந்தெவ ணுமேநலம் புரிந்தார்
              நவ்வியே தமையே நம்பிவந் தவர்க்கே நலமிகு மருட்சுக மளித்தார்.

80.        சீரியா எவணு மார்த்ததே பரவி மிகச்சிறப் பொடுமவர் புகழ்ச்சி
              ஆரிய னவரை நாடியே யடைந்தார் பலவிதப் பிணியுளர் பலபேர்
              சீரியர் தவிர்த்தார் சந்த்ரரோ கமுமே திமர்வதம் கொடும்பிணி பலவே
              மீறியே யலகை துன்புறுத் தினரே விடுதலை யருளிமீட் டனரே.

81.        சேர்ந்துபின் தொடர்ந்தார் திரள்ஜனங் குழுமி தெக்கபோ லியென்திசை யிருந்தும்
              யோர்தனக் கரையில் எருசலே மிருந்தும் யூதநா டயல்திசை யிருந்தும்
              சீர்மிகு கலிலீ சேர்ந்தஅத் திசையில் இருந்துவந் தனரெவ ணிருந்தும்
              கூர்ந்துகே ட்டனரே நல்ல போதகமே நற்சுக மடைந்தனர் குணமாய்.

36. குட்டரோகி மத். 8 : 1 - 4; மாற். 1 : 40 - 45; லூக். 5 : 12 - 16

82.        பட்ணமொன் றினிலே பரன்குரு விருந்தார் பதறிவந் தனனவ ணொருவன்
              குட்டமென் கொடிய பிணியினாற் குரூர அவதியே யடைந்தவோ ரகதி
              கிட்டிவந் தனனே கிறிஸ்துவின் சமூகம் நெடுங்கிடை யாய்விழுந் தனனே
              இட்டமா யவர்தன் னிடரையே யகற்ற இரந்தனள் விசுவசத் தொடுமே.

83.        "உம்முள முவந்தால் சுசியெனக் கருள ஆமு மால்" எனவுரைத் தனனே
              தம்முள முருகி தமதருட் கரத்தால் தொட்டனர் தயவொடு மவனை
              எம்முள மிதுவே சுசியடை குவையே யென்றுடைத் தனருட் பரனே
              வெம்பிணி யகன்றே விடுதலை யடைந்தே பூரண சுகமடைந் தனனே.