84. சுயநலம் விரும்பார் சொந்தமா மகிமை களைந்துவந் தலாதிருச் சுதனே "நயமிகச் சுகமே பெற்றனை நலமாய் நவிலா திருப்பா யெவர்க்கும் நயமிக எவர்க்குஞ் சாட்சியா யிருக்க நலமெ்ாடா லயமே யடைந்தே நியமமே யதுபோல் மோசை விதித்த உனதுட கடமை செலுத்துக". 85. காற்றைப் பிடிக்கு ளடக்குவ தியல்போ கடந்துப ரவுமதே யெவணும் ஏற்றமாஞ் சுகமே யடைந்தஇம் மனுடன் எதுவித மடக்குமிம் மகிமை நாற்றிசை யெவணும் பரிவொடுந் திரிந்தே நவின்றனன் மகத்துவ விடயம் போற்றிப் புகழ்ந்தே புனிதனின் மகிமை புகன்றனன் எவணுமே யெவர்க்கும். 86. தேட்டமா யினரே திவ்யநற் குருவின் திருமுக தரிசனம் பெறவே நாட்டமா யினரே பார்க்கநல் லவரை நலமிகும் வசனமூங் கொளவே நாட்டினுள் ளவராம் நோயரும் நலிந்தோர் நடத்தியும் நலமொடே சுமந்தும் கூட்டிவந் தனரே கொற்றவ னிடமே குணம்பெற அகம்புற மவரால். 87. விண்ணலம் பெறவே விரும்பினோர் பலபேர் வெறுமன தினர்மிகு திரள்பேர் விண்ணவர் நலமே விரும்பிவந் தவர்க்கே மிகமன முவந்தளித் தனரே கண்களி விரும்பிக் கவனமில் லவராங் கசடரை விலகியே பரனே மண்ணவர் செறிந்த நகரையே விடுத்தே வனங்களிற் றரித்திருந் தனரே. 37. நூற்றுக்கதிபனின் ஊழியன் சுகம்பெறல். மத். 8 : 5 - 13; லூக். 7 : 1- 10 88. திரும்பிவந் தனரே திவ்யநற் குருவே கபர்நகூ மெனும்பதி யினுக்கே வருந்தியே யழைக்க மூப்பரே யணுகி வான்பரி காரியா மவரை கருத்தொடு மழைத்தார் காருணி யனையே காரியஸ் தராமப் பெரியோர் திருத்தமாய் நடந்தே பக்தியுள் ளவனாம் நூறுவர்க் கதிபனாஞ் சிறந்தோன் 89. "நமதுட ஜனமேல் நேசமுள் ளவனே நமக்கொடு ஜெபாலய மியற்றி உமதருள் தயையும் எமதுட மதிப்பும் பெறுவதற் குரியபாத் திரனே நமதுள பணியாள் நாட்பல பிணியன் மரணநி லமையடைந் தனனே உமதருள் புரிக இக்ஷணம் வருக உயிர்வரந் தருக" வென்றனரே. |