90. அருள்மிகு பரனார் அவர்மனப் படியே அவரொடு செலவிணங் கினரே வருகிறே னுடனே நலமிக அவணே யருள்வேன் நற்சுக மெழும்பும் திருக்குரு எழுந்தே விரைந்துமே யுடனே சென்றன ரவனக முகமாய் வருவதை யறிந்தே அதிபதி யெதிர்வந் தவரை வணங்கியே யுரைத்தான் 91. ஆண்டவா எனது வீட்டினுள் வரவே அபாத்திர மானவன் எளியேன் ஆண்டவா உரைத்தால் நீரொரு மொழியே யடைகுவா னவன்சுக முடனே ஆண்டவா அடியேன் அற்பனா மதிபன் அடங்கினோன் மேலதி பருக்கே தாண்டிமீ றியுமே செல்பவ னுளனோ தமியனி னூழ்யரி லெவனும். 92. "ஆண்டுநீ யகலென் றேவவே யவனை யவன்செலு கின்றன னுடனே ஈண்டுநீ வருக எனஇவ னையேவ இவன்வரு கின்றன னுடனே ஈண்டிதைச் செயவென் றேவவே யொருவன் செய்கிறா னப்படி யுடனே ஆண்டவா வுரைக்கில் நீரொரு மொழியே தடுத்ததை மீறுமோ எதுவும்". 93. இப்படி யுரைக்கப் பரனிதை யறிந்தே மாவியப் படைந்துபின் திரும்பி, "ஒப்புயர் விலதா முயிர்விசு வசமே எத்தகைத் தெனவுணர்ந் தறிமின் இப்படி யரிதா முயர்விசு வசமே நஞ்ஜன மிஸரவே லருளே எப்பொழு தெனிலு மறிந்தது முளதோ இலையே நிசமியம் புகிறேன். 94. "மேற்கிலோ கிழக்கோ வேறெவ ணிருந்தும் ஆவலாய்ச் சேர்வரே திரள்பேர் பேர்பெறு மபிராம் விசுவசத் தகப்பன் பின்னரீ சாக்குயாக் கொபொடும் ஏற்படும் விருந்தில் பந்தியி லமர்ந்தே இன்பொடு நன்மைகள் நுகர்வார் பார்க்கிலோ ராஜ்ய மக்களென் பவரோ பாழ்புறம் பாயிரு ளடைவார். 95. "இருளிலே யுளவாம் அழுகை பற்கடிப் பெப்பொழு துமுள"தென் றியம்பி திரும்பி தளத்தி னதிபனை விழித்தே, "திரும்பி செல்கவுன் னகமே விரும்பிய படியுன் விசுவிச மதனால் வினைந்ததுன் விருப்ப" மென் றனரே திரும்பி யகன்றான் திடவிசு வசியே திமிர்வதன் சுகமடைந் திருந்தான். 38. திமிர்வாதன் ககம்பெறல். மத். 9 : 1 - 8; மாற். 2 : 1 - 12; லூக். 5 : 17 - 26. 96. குருபரன் புகழே சொல்லவே யெவனும் குழுமிஜ னமவரோ டிருப்பார் அருகுறு கலிலீ யூதநா டுகளி லிருந்ததுமே எருசலே மிருந்தும் பரிசயர் நியாய சாஸ்திரி யருமே பிறருமே பரிந்துவந் திருப்பார் அருட்குரு அவர்க்கே வீட்டினி லிருந்தே யருளின ரரியபோ தகமே. |